அய்யய்யோ அம்மாடி" - மலுமிச்சம்பட்டி குடியிருப்புக்குள் புகுந்த நல்லபாம்பு... அலறிய குடும்பத்தினர் !!!
கோவை, மலுமிச்சம்பட்டி அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள், வழிதவறி நுழைந்த பயங்கர நச்சுத்தன்மை வாய்ந்த நாகப்பாம்பு (Cobran Snake) ஒன்றைக் கண்டு குடும்பத்தினர் அலறி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறுதியாக சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர், அந்தப் பாம்பை மிகவும் சாதுரியமாக உயிருடன் பிடிக்கும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை மாநகரின் புறநகர்ப் பகுதியான மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஒரு பிரதான குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள், நேற்று மாலை அருகில் உள்ள புதர் பகுதியில் இருந்து வெளியேறிய வீட்டின் முன் பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த குடும்பத்தினர்,
உடனடியாக இதுகுறித்து, கோவையில் வனவிலங்குகள் மீட்பில் ஈடுபட்டு வரும் 'இயற்கை வன உயிரின ஆர்வலர் குழு'விற்கு (Nature & Wildlife Conservation Team) அவசரத் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில், அந்த அமைப்பைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரான மோகன் மோனா என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
வீட்டிற்குள் பதுங்கி இருந்த அந்த நச்சுப் பாம்பை, மோகன் மோனா மிகவும் லாவகமாகப் பிடிக்கத் தொடங்கினார்.
அப்பொழுது அந்த குடும்பத்தில் இருந்த குழந்தை ஒன்று "அய்யய்யோ.. அம்மாடி.." என்று பயத்தில் கூறிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த நாகப்பாம்பை, தனது கைகளால் சாதுரியமாகப் பைக்குள் அடைத்தார். அதன் பின்னரே வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பிடிபட்ட அந்த நாகப் பாம்பிற்கு எவ்வித காயமும் ஏற்படாதவாறு பாதுகாப்பாக மீட்ட மோகன் மோனா மற்றும் அவரது குழுவினர், அதனை வனத் துறையினரின் அனுமதியோடு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர்.
ஆபத்தான சூழ்நிலையிலும், குடியிருப்பு வாசிகளைத் தவிக்கவிடாமல் துரிதமாகச் செயல்பட்டுப் பாம்பை மீட்ட வீரர் மோகன் மோனாவின் இந்தச் செயலைத் பாராட்டி, அங்கு இருந்த ஒருவர் எடுத்த வீடியோ பதிவு தற்பொழுது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

0 கருத்துகள்: