குழந்தைகளைக் கூட பார்க்க முடியவில்லை ; என்று நடிகர் ரவிமோகன் குற்றச்சாட்டு - மாமியார் சுஜாதா விஜயகுமார் மறுப்பு !!!
தனது குழந்தைகளைக் கூட பார்க்க முடியவில்லை என்று நடிகர் ரவிமோகன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு அவருடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஆர்.பி. சௌத்ரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆர்.பி.சௌத்ரியின் மகன்களான ஜீவா, ஜித்தன் ரமேஷ், நடிகர் நாசர், இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், கதிரேசன், காட்டக்கார பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு ரவிமோகனின் மாமியாரும், திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "ரவிமோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அவர் இவ்வாறு பேசக் கூடாது. அவர் தரப்பு தான் நியாயம் என்பது போல மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிறார்.
நான் இதை சட்டத்தின் வழி நின்று உண்மை எதுவென அனைவருக்கும் உணர்த்துவேன். இதனை நான் பெரிது படுத்தாததற்கு காரணமே என் பேரன் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி, இந்த பிரச்சனையால் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறான். இளம் வயதிலேயே பார்க்கக் கூடாததை எல்லாம் பார்த்து விட்டான். அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறான்" என்றார்.
கேள்வி: தனது பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை என ரவிமோகன் தெரிவித்து உள்ளார். உங்கள் பதில் என்ன?
சுஜாதா விஜயகுமார்: இது, முற்றிலும் பொய்யானது. ரவிமோகன் உண்மைக்கு மாறான தகவல்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்.
கேள்வி: ரவிமோகன் - ஆர்த்தி திருமணமே, ஆர்த்தியின் பிளாக் மெயில் மூலமாக நடைபெற்றது ரவி தெரிவித்து உள்ளாரே?
சுஜாதா விஜயகுமார்: 2008 காலகட்டத்தில் வந்த விகடன் இதழில் இது தொடர்பாக விளக்கமான ஒரு நேர்காணல் வந்தது. அதில் யார் கையை யார் அறுத்துக் கொண்டு திருமணம் செய்தார்கள் என்று உள்ளது. அந்த இதழை தேடிக் கொண்டு இருக்கிறேன். அது கிடைத்தால் உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் கிடைக்கும்.
கேள்வி: ரவி மோகன் தான் சம்பாதிக்கும் பணத்தைக் கூட செலவு செய்யவில்லை முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறாரே ?
சுஜாதா விஜயகுமார்: ஒரு குடும்பமாக இருக்கும் பொழுது கணவன், மனைவி இருவரும் சம்பாதிப்பது குடும்பத்திற்காகத் தான். இது தொடர்பாக நீதிமன்றத்தில் கூட இதையே தெரிவித்தோம்.
கேள்வி: உங்கள் மருத்துவ செலவிற்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக ரவி மோகன் தெரிவித்து இருக்கிறாரே?
சுஜாதா விஜயகுமார்: அவர் அப்படி தரவில்லை. ஒருவேளை தந்து இருந்தால் கூட ஒரு மாப்பிள்ளையாக அவர் தனது கடமையை செய்திருக்கிறார் என்று தான் அர்த்தம்.
கேள்வி: உங்கள் இரண்டாவது மகளின் கணவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு தப்பித்து விட்டது போல் நானும் விரைவில் விவாகரத்து வாங்கி விடுவேன் என ரவி மோகன் தெரிவித்து இருப்பது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சுஜாதா விஜயகுமார்: விவாகரத்து பெற்றுச் சென்றவர் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் வேறு ஒரு குடும்பத்தை தேடிச் சென்று விட்டார். அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன. அதைப் பற்றி இந்த நேரத்தில் பேசுவது சரியாக இருக்காது.
கேள்வி: 25 பேர் தொடர்ந்து அவதூறு பரப்பியதால் கெனிஷா பிரிந்து சென்று விட்டார் என ரவிமோகன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு என்ன சொல்கிறீர்கள்?
சுஜாதா விஜயகுமார்: விரைவில் அதனை நாங்கள் கண்டுபிடிக்க போகிறோம். இணையத்தில் அவதூறு பரப்பிய நபர் யார் ?என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும்.
கேள்வி: தனது மகன்களுக்காக மட்டுமே தான் உயிர் வாழ்வதாக ரவிமோகன் உருக்கத்தோடு தெரிவித்து உள்ளார். உங்கள் கருத்து என்ன?
சுஜாதா விஜயகுமார்: அவரவர் பெற்ற குழந்தையை அவரவர் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் என் மகள்களுக்காக வாழ்கிறேன். அதேபோல அனைத்து பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டும்.
கேள்வி: நடிகர் ரவிமோகன் தனது குழந்தைகளை கடைசியாக எப்போது பார்த்தார்?
சுஜாதா விஜயகுமார்: கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை ரவி மோகன் தனது குழந்தைகளை பார்த்து விட்டு சென்று உள்ளார்.
கேள்வி: ஆர்த்திக்கு ஆதரவாக மூன்றெழுத்து இட்லி நடிகை பேசி வருகிறார். அவருக்கு என்னை பற்றி பேச அருகதை இல்லை என ரவி மோகன் பேசி இருக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
சுஜாதா விஜயகுமார்: தமிழ்நாட்டில், பெண்களுக்கு அநீதி நடக்கும் பொழுது அனைவரும் குரல் கொடுப்பார்கள். ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவிற்கு மில்லியன் கணக்கானோர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இது சாதாரண நிகழ்வு தான். இதில் எந்த விதமான உள்ள அர்த்தமும் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் நான் பேசவில்லை. ஏனெனில் அது நீதிமன்றத்திற்கு எதிரானது" என்று பதில் அளித்தார்.

0 கருத்துகள்: