திங்கள், 25 மே, 2026

இன்ஸ்டாகிராம் காதல் ‘பிரேக் அப்’; காதலி வீட்டின் மீது ‘பெட்ரோல் குண்டு’ வீசிய சென்னை ரவுடி - கோவையில் நள்ளிரவில் பரப்பரப்பு !!!

SHARE

இன்ஸ்டாகிராம் காதல் ‘பிரேக் அப்’; காதலி வீட்டின் மீது ‘பெட்ரோல் குண்டு’ வீசிய சென்னை ரவுடி - கோவையில் நள்ளிரவில்  பரப்பரப்பு !!!

திண்டுக்கல் ‘குண்டாஸ்’ கைதியின் வெறிச்செயல் : இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் வாசலில் பீர் பாட்டில்களை வீசிய கும்பல் !!!


 இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பின்னர் பிரேக் அப் செய்ததால் ஆத்திரம் அடைந்த சென்னை ரவுடி ஒருவன், தனது கூட்டாளிகளுடன் வந்து காதலியின் வீட்டின் மீது பெட்ரோல் மற்றும் எரியும் எண்ணெய் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களை வீசி ‘குண்டு வைப்பு’ பாணியில் தாக்குதல் நடத்திய சம்பவம் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த கள்ளிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் இளம் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 84/2026-ன் கீழ் தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் வெளியாகி உள்ள தகவல்கள் கொங்கு மண்டலத்தையே அதிரவைக்கும் விதமாக உள்ளது. 

 கல்லூரி படிக்கும் மகளுக்கு, அவரது கிளாஸ்மேட் மூலம் சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் (30) என்ற ஆசாமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) சமூக வலைத்தளம் வழியாகத் தீவிரக் காதலாக ‘ரூட்’ மாறி உள்ளது. இந்த ‘லவ் டிராக்கைப்’ பற்றிப் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் அந்த நபரின் பின்னணி குறித்து ‘கள ஆய்வு’ செய்து உள்ளனர். 

அப்போது தான் காதலன் கார்த்தி சாதாரண ஆள் இல்லை என்பதும், கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் பயங்கர குற்ற வழக்குகளில் சிக்கி குண்டாஸ்’  (Goondas Act) சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைக் கம்பிகளை எண்ணிய ‘ஸ்கெட்ச்’ ரவுடி என்பதும் அம்பலமானது.

 காதலனின் இந்த பயங்கர குற்றப் பின்னணியை அறிந்து அதிர்ந்து போன பெற்றோர், தங்களின் மகளின் காதலுக்குக் கடுமையான எதிர்த்து உள்ளனர். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண்ணும், ரவுடி கார்த்தியுடனான அனைத்து தொடர்புகளையும் கட் செய்து, ‘பிரேக் அப்’ செய்து ‘ உள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சென்னை ரவுடி கார்த்தி, நேற்று மாலை 5.30 மணி அளவில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களில் கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள காதலியின் வீட்டிற்கு சென்று உள்ளார்.

அவர்கள் முன்னரே ப்ளான் செய்து கொண்டு வந்து இருந்த, எரியக் கூடிய ஆயில் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களைப் பற்ற வைத்து, இளம் பெண்ணின் வீட்டின் நுழைவாயிலை நோக்கி வீசி எறிந்து ‘பெட்ரோல் குண்டு’ தாக்குதல் நடத்தி உள்ளனர். 

இந்த அதிர்ச்சித் தாக்குதலில் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த காலணி வைக்கும் ஸ்டாண்ட் (Footwear Stand) தீப்பற்றி எரியத் தொடங்கியது. 

நல்வாய்ப்பாக இந்த விபரீத சம்பவத்தில் யாருக்கும் எந்தவித உடல் காயமும் ஏற்படவில்லை. 

இதுகுறித்த அவசரத் தகவல் கிடைத்ததும், தொண்டாமுத்தூர் காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்து மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தனர். 

இன்ஸ்டாகிராம் காதலால் அரங்கேறிய இந்த ‘பீர் பாட்டில் குண்டு’ விவகாரம் குறித்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய சென்னை ரவுடி கார்த்தி மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிக்க ‘வலைவீசி’த் தேடி வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: