வியாழன், 25 ஜூன், 2026

கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை 'அதிரடி வேட்டை': நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் நித்திலன் இல்லத்தில் 10 பேர் கொண்ட டீம் 'சரமாரி' சோதனை !!!

SHARE

 கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை 'அதிரடி வேட்டை': நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் நித்திலன் இல்லத்தில் 10 பேர் கொண்ட டீம் 'சரமாரி' சோதனை !!!

​தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வழக்கு - ரேஸ்கோர்ஸ் குடியிருப்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு !!!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை பொறியாளர் நித்திலன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சென்னை, திருவண்ணாமலை வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். 

தி.மு.க ஆட்சியின் போது பல கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் மீது அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

வழக்கில் 6 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைத்துறை கோவை வட்டார கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பு இன்ஜினியர் நித்திலனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஈரோடு நாபார்டு மற்றும் ஊரக ரோடுகளின் டிவிசனல் இன்ஜினியராக பணி புரிந்த போது மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரசு குடியிருப்பில் நித்திலன் வசித்து வருகிறார். அங்கு ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். சோதனையை ஒட்டி நித்திலனின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: