புதன், 17 ஜூன், 2026

தொடரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை ; 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேற்கு வங்க இளைஞர்..

SHARE

 தொடரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை ; 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேற்கு வங்க இளைஞர்..

சென்னையில் கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த கிராமத்தில், டெல்லியை சேர்ந்த ஒரு தம்பதியர், நகை அடகு கடை வைத்து உள்ளனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். 

இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே, புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டின் கட்டுமான பணிகளுக்கு, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜெய்சாந்த் மண்டல், வயது 32, என்பவர் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்து உள்ளார். மாலை வேலை முடிந்த பின், இரவு, அங்கேயே தங்குவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் புதிய வீட்டின் கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. 

அன்றைய தினம் காலை 10 மணி அளவில், டெல்லி தம்பதியரின் 10 வயது மகள், புதிதாக கட்டப்படும் வீட்டின் கட்டுமானங்களுக்குள் சென்று, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் குவியலில் விளையாடி உள்ளார்.

அப்போது, அங்கு தங்கியிருந்த ஜெய்சாந்த் மண்டல், சிறுமியிடம் ஆசையாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். 

இதனால் பயத்தில் அலறிய சிறுமி, அங்கு இருந்து தப்பி, தன் பெற்றோரிடம் வந்து, நடந்த சம்பவங்களை அழுதபடியே கூறி உள்ளார்.

இதை அடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ஜெய்சாந்த் மண்டலை நேற்று காலை கைது செய்தனர். 

பின், போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து, நேற்று மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: