ராணுவத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும் நீட் தேர்வு ; முறைகேடுகளைத் தடுக்க மோடி அரசின் அதிரடி நடவடிக்கை....
மருத்துவ படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜுன் 21ம் தேதி நாடு முழுவதும் 500-க்கும் அதிகமான மையங்களில் நடைபெற உள்ளது.
2026-27 கல்வியாண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும், 551 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நடைபெற்றது. சுமார் 23 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக கடந்த 7ம் தேதி தகவல் வெளியாகவே, தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பலரையும் கைது செய்துள்ளது. அதேநேரம், தேர்வு முகமையின் பல்வேறு தேர்வுகளிலும் குளறுபடி நடைபெறுவது தொடர்கதையாகி உள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக களமாடி வருகின்றன.
இதனிடையே, வரும் ஜுன் 21ம் தேதி அன்று நீட் மறுதேர்வு நடத்தப்பட்ட உள்ளது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.
வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்வதில் தொடங்கி, விடைத்தாளகளை பாதுகாப்பாக கொண்டு செல்வது வரையிலான நீட் தேர்வை, முற்றிலுமாக பாதுகாப்பானதாகவும், எந்தவித குளறுபடிகளும் நிகழாத வண்ணமும் நடத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
ராணுவ விமானங்களை பயன்படுத்துவது, பாதுகாப்பு வீரர்களை களமிறக்குவது, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை என அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளது.
வினாத்தாள்கள் மற்றும் தேர்வுக்குப் பிந்தைய ஓஎம்ஆர் விடைத்தாள்கள் உள்ளிட்ட முக்கியமான தேர்வுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குப் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய ரிசர்வ் காவல் படை (சி) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) ஆகியவற்றுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
NEET தேர்வுகளை முன்னிட்டு, ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளில் 'செய்தித் திருத்த' (message-editing) வசதியை ஜூன் 30 வரை முடக்குமாறு டெலிகிராம் (Telegram) நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

0 கருத்துகள்: