வெள்ளி, 5 ஜூன், 2026

இன்று மதியம் 12 மணிக்கு சமூக வலைதளத்தில் மனம் திறக்கிறார் அண்ணாமலை !!!

SHARE

 இன்று மதியம் 12 மணிக்கு சமூக வலைதளத்தில் மனம் திறக்கிறார் அண்ணாமலை !!!

இன்று மதியம் 12 மணிக்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக மனம் திறந்து உரையாட உள்ளதாக அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பா.ஜ.க வில் இருந்து விலகுவதாகவும், புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் கடந்த சில நாள்களாகவே தகவல் பரவி வந்தது. அத்துடன் புதிய கட்சி குறித்த அறிவிப்பை அண்ணாமலை தமது பிறந்த நாளான நேற்று (ஜுன் 4) அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த தகவல்களுக்கு ஏற்றாற்போல் கடந்த திங்கள்கிழமை (ஜுன் 1) அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்த அவர், பா.ஜ.க விவ் இருந்து விலகும் தமது விருப்பத்தை தெரிவித்ததாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.

தமது இரண்டு நாள்கள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பி உள்ள அண்ணாமலை, தமது பிறந்த நாளான நேற்று அவரது ஆதரவாளர்கள் மனம் மகிழும் படியான தகவலை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டு உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: