வெள்ளி, 5 ஜூன், 2026

17 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை: கார் டிரைவரை தூக்கிய போலீஸ் !!!

SHARE

 17 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை: கார் டிரைவரை தூக்கிய போலீஸ் !!!

மது கொடுத்து 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் உள்ள தாராநல்லூரில் வாழைக்காய் மண்டி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதன் இடையே, இரு தினங்களுக்கு முன்பு கல்மந்தை காலனி பகுதியில் வசிக்கும் தனது திருநங்கை சகோதரி வீட்டுக்கு சிறுமி சென்று உள்ளார். அப்போது, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம் (வயது 45) என்கிற கார் ஓட்டுநர், அந்த திருநங்கையின் வீட்டுக்கு வந்து உள்ளார்.

அந்த நேரத்தில் சிறுமி தனியாக இருந்ததாகக் கூப்படுகிறது. இதை பார்த்த மாரி செல்வம், காரில் அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுமியை கூட்டிச் சென்று உள்ளார். பின்னர் மது வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அதே காரில் அவரை ஏற்றிக் கொண்டு, வாழைக்காய் மண்டி, கீரைகடை பஜார் பகுதியில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அழைத்து வந்து உள்ளார். அப்போது அவர் சுயநினைவில்லாமல் இருந்ததால், காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அங்கு இருந்து சென்று உள்ளார். இதைக் கண்டு அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் உடனடியாக காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவரை சரமாரியாக தாக்கிய மக்கள், காந்தி மார்க்கெட் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். தொடர்ந்து, சிறுமியை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் இடையே, கார் ஓட்டுநர் மாரி செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள், மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதை அடுத்து, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், மாரி செல்வம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் மாரி செல்வத்திற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சுயநினைவு திரும்பிய பின்னரே, அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: