கோவையில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகள் ; கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரத் தாய் - ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!
கோவை அருகே பெற்ற மகளையே தாய் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவத்தில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாலுக்கா தம்மம்பதி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், சரோஜினிக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்று உள்ளது.
இவர்களுக்கு நிவன்யாஸ்ரீ என்ற ஒன்னரை வயது பெண் குழந்தை இருந்தது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, சரோஜினி கோபித்துக் கொண்டு சேத்துமடையில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்று உள்ளார். அங்கு வாய்க்கால் பராமரிப்பு வேலைக்குச் சென்ற போது, பொம்மன் என்ற நபருடன் சரோஜினிக்குத் தகாத நட்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த ‘கள்ளக்காதல்’ விவகாரம் கணவர் மணிகண்டனுக்குத் தெரியவரவே, அவர் சரோஜினியைக் கண்டித்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சரோஜினி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கள்ளக் காதலன் பொம்மனிடம் வற்புறுத்தி உள்ளார். அதற்குப் பொம்மன், “குழந்தை நிவன்யாஸ்ரீ நமக்கு இடைஞ்சலாக இருக்கிறாள், அவளைக் கொன்று விட்டால், நாம் நிம்மதியாகப் புருஷன், பொண்டாட்டியாக வாழலாம்” எனக் கூறி உள்ளார். இதற்கு இடையே, கடந்த 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சமாதானம் பேசப்பட்டு, சரோஜினியும் குழந்தையும் தம்மம்பதியில் உள்ள கணவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். சம்பவத்தன்று காலை மணிகண்டன் கூலி வேலைக்குச் சென்றதும், அவரது பெற்றோர் வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த சமயம் பார்த்து, முற்றத்தில் விளையாடிக் கொண்டு இருந்த ஒன்னரை வயதுக் குழந்தை நிவன்யாஸ்ரீயை சரோஜினி வீட்டிற்குள் தூக்கிச் சென்று உள்ளார். கள்ளக் காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற குருட்டு ஆசையில், படுக்கை அறையில் வைத்து அந்தக் பிஞ்சு என்றும் பாராமல் தன் சொந்த மகளின் கழுத்தை சரோஜினி கொடூரமாக நெரித்துக் கொலை செய்து உள்ளார்.
குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று நாடகமாடி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், மருத்துவர்கள் சோதித்து விட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் உடற்கூறாய்வு அறிக்கையில் குழந்தையின் கழுத்து மிகக் கொடூரமாக நெரிக்கப்பட்டதால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது எனத் திட்டவட்டமாகத் தெரியவந்தது.
இதை அடுத்து, கொலைக் குற்றத்திற்காகத் தாய் சரோஜினி மீது 302 ஐபிசி பிரிவின் கீழும், கொலைக்குத் தூண்டுதலாக இருந்த கள்ளக் காதலன் பொம்மன் மீது 302 உடன் இணைந்த 109 ஐ.பி.சி பிரிவின் கீழும் ஆனைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரித்த கோவை V கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீதிபதி சிவக்குமார் பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 2000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

0 கருத்துகள்: