கோவையில் மகள் முறை சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் அத்துமீறல் ; தாய் நடவடிக்கை எடுக்காததால் துணிச்சலுடன் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்த 16 வயது சிறுமி; போக்சோ’ சட்டத்தில் எலெக்ட்ரிசியன் அதிரடி கைது !!!
கோவையில் மகள் முறை உறவு உள்ள சிறுமியிடம் கடந்த சில மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த 43 வயது நபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளம் குமாரசாமி காலனி, சுண்டப்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் துரைராஜ் காசிலிங்கம் என்பவரின் மகன் பார்த்திபன் (வயது 43). பார்த்திபன் தற்போது கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள அன்பு நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். பார்த்திபனுக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் எலெக்ட்ரிசியன் ஆக பணி புரிந்து வந்தார். இவருக்கு மகள் முறையான உறவுடைய சிறுமி ஒருவர் உள்ளார். சிறுமிக்கு தந்தை இல்லை. தாயார் மட்டும் உள்ளார். பார்த்திபன் கடந்த சில மாதங்களாக அந்தச் சிறுமியிடம் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுமி, இதுகுறித்து தனது தாயாரிடம் அழுது கொண்டே விவரித்து உள்ளார்.
இதனை கேட்ட தாய் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 16 வயது சிறுமி, உடனடியாக கோவை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து விரிவான புகார் அளித்தர. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
சிறுமி மற்றும் பார்த்திபனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பார்த்திபன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அடுத்து, தலைமறைவாக முயன்ற பார்த்திபனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்: