கோவை குமாரசாமி குளத்தில் 1.80 கோடியில் நவீன கபடி கோர்ட் - மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் !!!
கோவை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மேற்கு மண்டலம் 74 வது வார்டு குமாரசாமி குளத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி விளையாட்டு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகிறார்கள்.
அங்கே அவர்களுக்கு விளையாட்டு மைதான வசதி இல்லாததால் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர்களின் உடல் நலம் மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் குமாரசாமி குளம் வளாகத்தில் நவீன வசதிகளுடன் கபடி கோர்ட் 1.80 போடி மதிப்பீட்டில் அமைச்சர் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் சுமதி கடந்த நான்கரை வருடங்களாக மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்றது என்றும் ஆனால் தற்போது பணிகள் நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார். கூட்டத்தில் மேயர் ரங்கநாயகி 59 வது வார்டு கவுன்சிலர் மோகன் சுயேச்சைகவுன்சிலராக கருதப்படுவார் என்று தெரிவித்தார். தொடர்ந்து வடக்கு மண்டலம் நான்காவது வார்டில் பிள்ளை கிணறு பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நீண்ட கல்வி நலனை கருத்தில் கொண்டும் போட்டியில் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையிலும் 2 கோடி மதிப்பில் படைப்பகம் கட்டுவதற்கு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

0 கருத்துகள்: