28 வயது மதிக்கத்தக்க பெண்ணை வன்புணர்ச்சி செய்த வழக்கு ; கைதான நபருக்கு 10 வருட சிறை தண்டனை - தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம்...
கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணி (43) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் *மகளிர்( Mahila Court) நீதிமன்றத்தில்* விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று (17.06.2026) எதிரி பாலசுப்பிரமணிக்கு 10 வருட சிறைதண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் தலைமை காவலர் கீதா (WHC 325) என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் வெகுவாக பாராட்டினார்.

0 கருத்துகள்: