அங்கீகாரம் இல்லாத கல்லூரி” ; 300 மாணவர்களின் 3 ஆண்டு கால மருத்துவக் படிப்பு கேள்விக்குறி - “5 ஆண்டுகளாக ஒரு பேட்ச்-க்கு கூட சான்றிதழ் தரவில்லை என குற்றம் சாட்டிய மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !!!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மஹாராஜா பாரா மெடிக்கல் கல்லூரியை சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில்மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,
"இந்த கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிம்க்கிறோம். இங்கு, பி.எஸ்.சி ரேடியாலஜி, டிப்ளமோ ஆப் நர்சிங், பி.ஏ.எம்.எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கல்லூரி உரிய அங்கீகாரம் பெறாமல் நடத்தி வந்தது எங்களுக்கு தெரிய வந்தது.
கல்லூரி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை ஒரு பேட்ச் கூட மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை. ஏற்கனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளோம்.
கல்லூரி நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தில் பாராம் மெடிக்கல் படித்த எங்கள்து மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கை பயனில்லாமல் உள்ளது.எனவே எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று கல்லூரியை ஏற்பாடு செய்து கொடுத்து, எங்கள் கல்லூரி கனவை நிறைவேற்றித்தர வேண்டும்." என்றனர்.

0 கருத்துகள்: