திங்கள், 15 ஜூன், 2026

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை இல்லை, தகாத வார்த்தைகளால் பேச்சு” ; கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முதியவர் திடீர் தர்ணா - பரபரப்பு !!!

SHARE

 கோவை அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை இல்லை, தகாத வார்த்தைகளால் பேச்சு” ;  கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முதியவர் திடீர் தர்ணா - பரபரப்பு !!!

கோவை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. ஏராளமான மக்கள் மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். 

இதையொட்டி கோவை கலெக்டர் அலுவலக வாசலில் வளாகத்தில் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. 

அப்போது கலெக்டர் அலுவலக பார்சல் அருகே ஒரு முதியவர் வந்தார். திடீரென்று அங்கு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனடியாக அந்த முதியவரை சாலையில் அமரக் கூடாது என்று கூறினர். 

அப்போது அந்த முதியவர் தனது பெயர் மணிவாசகம் (வயது 68) என்றும் வட வழியில் சேர்ந்த தனக்கு கை கால் மற்றும் உடல் வலி பாதிப்புக்கு கடந்த 1 ஆம் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அட்மிட் ஆனதாகவும் அங்கு தனக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் ஊழியர்கள் இது குறித்து கேட்ட போது தகாத வார்த்தையால் பேசியதாகவும் கூறினார். 

எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வந்ததாக தெரிவித்தார்.. அதன் பிறகு அவரை சமாதானம் செய்த போலீசார் புகார் மனுவை கலெக்டரிடம் கொண்டு சென்று அளிக்கும்படி கூறி சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: