சனி, 6 ஜூன், 2026

துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர் ; 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து சூலூர் சிறுமி கொலைக் குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைப்பு !!!

SHARE

 துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர் ; 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து சூலூர் சிறுமி கொலைக் குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைப்பு !!!

​இறுதிக்கட்டத்தை எட்டியது குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி... கோவை போக்சோ நீதிமன்றத்தில் பரபரப்பான விசாரணை !!!

​ கோவை, சூலூர் அருகே 10 வயது பிஞ்சுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், 3 நாட்கள் போலீஸ் காவல் (Police Custody) முடிவு அடைந்ததை அடுத்து, குற்றவாளிகள் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் இன்று மீண்டும் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திரண்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு நீதிமன்றமே பரபரப்பாகக் காட்சி அளித்தது.

​கோவை சூலூர் கண்ணம்பாளையத்தில் கடந்த மே 21-ஆம் தேதி 10 வயது சிறுமி கடத்திக் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி (A1) மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சாட்சியங்கள் மற்றும் தடயங்களைச் சேகரிக்கக் கடந்த ஜூன் 3-ஆம் தேதி இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோவை போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

​கடந்த 3 நாட்களாகக் கோவை மாவட்ட தனிப்படை போலீஸார், குற்றவாளிகள் இருவரையும் சம்பவம் குறித்து விடிய, விடிய தீவிர விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் (ஜூன் 4) சம்பவம் நடந்த கண்ணம்பாளையம் குளக்கரைக்குக் குற்றவாளி கார்த்தியை நேரில் அழைத்துச் சென்று, கொலை எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பது குறித்துப் செய்து காண்பிக்க செய்து போலீஸார் விசாரணை செய்து முக்கியக் தடயங்களைப் பதிவு செய்தனர்.

​நீதிமன்றம் விதித்து இருந்த 3 நாட்கள் போலீஸ் காவல் கெடு இன்றுடன் (ஜூன் 6) நிறைவடைந்ததை அடுத்து, மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு குற்றவாளிகள் இருவரும் தற்பொழுது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

​ஏற்கனவே முதன்மைக் குற்றவாளி கார்த்தி சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டு இருந்ததாலும், நீதிமன்ற வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதில் காவல்துறை மிகக் கவனமாக இருந்தது.

 இதற்கென நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதப்படை மற்றும் போலீஸார் நீதிமன்ற நுழைவு வாயில் முதல் போக்சோ நீதிமன்ற அறை வரை பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி இருந்தனர்.

​நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரிடமும் நீதிபதி விசாரணையை மேற்கொண்டார்.

 பின்னர் குற்றவாளி கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் இருவரையும் வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: