ஸ்டாலின் தொடர்ந்து பேசட்டும்... தி.மு.க-வுக்கு அதுவே நல்லது” ; கோவை ஏர்போர்ட்டில் பதிலடி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் - “ஏற்கனவே பிளாப் ஆன அண்ணாமலை படம் ரீ-ரிலீஸ் ஆனா மக்கள் பார்ப்பாங்களா ?” !!!
“108 தொகுதிகளில் டெபாசிட் காலி ; இ.பி.எஸ் தவறான முடிவுகளால் த.வெ.க-விற்கு மாறும் அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள்”: மருத்துவக் காலிப் பணி இடங்கள் குறித்து பேட்டி !!!
கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பு
தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என பேசி இருப்பது குறித்த கேள்விக்கு,
அவர்கள் தொடர்ந்து இப்படி பேசிக் கொண்டு இருக்க வேண்டும். தொடர்ந்து மக்கள் தீர்ப்பை மதிக்காமல், பாடம் கற்றுக் கொள்ளாமல் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் தி.மு.க நன்றாக இருக்கும். தொடர்ந்து அவர்கள் அப்படியே பேசட்டும் என பதில்
மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு,
தமிழகத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மிக குறைவு. 99 சதவீதம் மருத்துவர் பற்றாக்குறை இல்லை.
பயிற்சி மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவர்கள் ஆகியோர் இருக்கின்றனர்.
ஆனால் செவிலியர் பற்றாக்குறை இருக்கிறது. அது குறித்து பேசி இருக்கின்றோம். கூடிய விரைவில் அதை சரி செய்வோம்
90 நிமிடங்களில் 430 க்கும் மேற்பட்ட திட்டங்களை அமைச்சரவை எப்படி ஆலோசித்தது என்ற கேள்விக்கு
தமிழ்நாட்டுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் 436 திட்டங்கள் குறித்து விரிவான கையேடு கொடுத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் பேசவில்லை. நீண்ட கால திட்டங்கள் குறித்த விரிவான பார்வை கொடுத்திருக்கிறார்கள். 436 திட்டங்களை 90 நிமிடத்தில் ஆலோசிக்க முடியாது. திட்டங்களுக்கான விவரங்கள் கையேடுகளில் இருக்கிறது. அதை பார்த்து எப்படி செய்ய வேண்டும் என சொல்லி இருக்கின்றோம்
அ.தி.மு.க தாய் இயக்கம் என்று ஆதவ் சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு
அ.தி.மு.க மட்டுமல்ல பல்வேறு கட்சிகளில் இருந்து த.வெ.க விற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் வருகின்றனர்.
அ.தி.மு.க வை பொறுத்த வரை ஏன் ? வருகின்றனர் என தெரியும். 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்து இருக்கின்றனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடுத்த முடிவுகள் தவறாகத் தான் போயிருக்கின்றது. 2026 தேர்தலில் பா.ஜ.க வுடன் இணைந்தார்கள். அதன் பின்பு தி.மு.க வுடன் சேர்ந்து கூட்டணி வைக்க வேண்டும் என நினைத்தது சிறந்த முடிவு. இதை எதிர்த்து தான் அனைவரும் வந்து கொண்டு இருக்கின்றார்கள். கூடிய விரைவில் அ.தி.மு.க வின் நிலைமை எப்படி இருக்கும் என பார்க்கத் தான் போகிறார்கள்.
மருத்துவ இடங்கள் குறித்த கேள்விக்கு,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பணி இடங்கள் சரண்டர் செய்யப்பட்டு இருக்கிறது. தேசிய மருத்துவ கழகம் ஒரு கட் ஆப் வைத்து இருக்கிறது அதற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று. தமிழகத்துக்கு ஒதுக்கிய இடங்கள் கட் ஆப் அதிகமாக இருப்பதால் அதை நிரப்ப முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு திருப்பி கொடுக்க பட்ட இடங்கள் கட் ஆப் குறைக்கப்பட்டு நிரப்பப்பட்டது. அதை நாமே செய்திருக்கலாம். கட் ஆப் குறைக்கக் கூடிய அதிகாரம் நமக்கு இருந்தால் நாமே அதை குறைத்து நிரப்பி இருக்க முடியும்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை மேல்முறையீடுக்காக அணுகி இருக்கிறோம். கூடிய விரைவில் நல்ல முடிவு வரும் என நினைக்கிறோம்.
7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உயர்த்த வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு,
அடிதட்டு மாணவர்கள் நகரப் பகுதி மாணவர்களுடன் படிப்பது கஷ்டம் தான். 7.5 சதவீத இட ஒதுக்கீடு உதவிகரமாக இருக்கிறது. இதை உயர்த்துவது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்..
மழைகால நடவடிக்கைகள் குறித்த கேள்விற்கு
மழைக் காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது குறித்து அடுத்த வாரம் அனைத்து மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் இணை இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. மருத்துவத் துறையில் தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
அண்ணாமலை புதிய இயக்கம் குறித்த கேள்விக்கு,
அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை. எந்த கறை வேண்டுமானாலும் மக்கள் விட்டு விடுவார்கள். பா.ஜ.க கறை, கடந்த இயக்கமாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க பல இடங்களில் முயற்சி செய்து தோற்று இருக்கிறார்கள். இப்பொழுது புதிய முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.
ஹிட்டான படம் ரீ ரிலீஸ் ஆனாலே வரமாட்டார்கள். ஒரு சிலரது படம் மட்டும் தான் பார்க்க வருவார்கள். ஏற்கனவே பலமுறை பிளாப் ஆன படம் இது.மக்களிடம் எப்படி ? எடுபடும் என தெரியவில்லை. தோல்வி நிச்சயம்.
யாரெல்லாம் பா.ஜ.க விற்கு ஓட்டு போட்டார்களோ, அந்த வலது சாரி சிந்தனையாளர்கள் தற்பொழுது ஒன்றினைந்து இருக்கிறார்கள்
சினிமா நடிகர் கட்சி என பல விமர்சனங்கள் வந்து இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் விஜய் ரசிகராக மட்டும் அல்ல,
50 ஆண்டுகளுக்கு மேலாக இரு கட்சிகளும் தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு கொண்டு இருந்த பொழுது , மாற்றம் வேண்டுமென மக்கள் நினைத்தார்கள்.
உச்சத்தில் இருந்து இந்த இடத்திற்கு வர வேண்டும் என நினைத்து தி.மு.க வையும், பா.ஜ.க வையும் எதிர்க்கும் துணிச்சல் இருந்ததால் தான் விஜயை தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.
விஜய் ரசிகராக யாரும் ஓட்டு போடவில்லை. அவரை தலைவராக ஏற்றுக் கொண்டதால் தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என பேட்டியில் கூறினார்.

0 கருத்துகள்: