நோ டென்ஷன், ஒன்லி மேய்ச்சல்’ ; மேட்டுப்பாளையம் - குன்னூர் ஹேர்ஃபின் பெண்டில் ஹாயாக ‘வாக்கிங்’ சென்ற 3 காட்டு யானைகள் - வாகனங்கள் ஹாரன் அடித்தும் கண்டுகொள்ளாத ‘கெத்து’ வீடியோ வைரல் !!!
மலைப் பாதையில் அரங்கேறிய கம்பீர உலா – மேலிருந்தபடி ‘லைவ் கவரேஜ்’ செய்த வாகன ஓட்டி !!!
கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் செல்லும் மலைப் பாதையில், மூன்று காட்டு யானைகள் எவ்வித பயமுமின்றி சாலையோரம் ஹாயாக ‘வாக்கிங்’ சென்ற காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்தச் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச் சுவரில் முளைத்து இருந்த பச்சைப் புற்களை, அந்த மூன்று யானைகளும் வரிசையாக நின்று மிகவும் நிதானமாக மேய்ந்து கொண்டு இருந்தன.
வார இறுதி விடுமுறை என்பதால் அந்தப் பாதையில் சுற்றுலா வாகனங்களின் நடமாட்டம் அதிகமாக இருந்த தருணத்தில், இந்த
யானைகளைப் பார்த்ததும் அச்சம் அடைந்த சில வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு, யானைகளை வழிவிடச் செய்வதற்காகத் தொடர்ந்து ‘ஹாரன்’ (Horn) அடித்து பலத்த ஒலி எழுப்பினர். ஆனால், அந்தப் யானைகளோ, சுற்றி இருந்த எந்த சத்தத்தையும், மனிதர்களின் நடமாட்டத்தையும் சற்றும் கண்டுகொள்ளாமல், தங்களது உணவை அருந்துவதிலேயே படு ‘கெத்தாக’ மும்முரம் காட்டின.
இந்த அசாத்தியமான மற்றும் கம்பீரமான காட்சியை, அந்த மலைப்பாதையின் மேல் வளைவில் வண்டியை நிறுத்தி இருந்த பயணி ஒருவர், தனது செல்போனில் மிகத் துல்லியமாக ‘வீடியோ கவரேஜ்’ செய்து இணையத்தில் தட்டிவிட்டு உள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி வரும் நிலையில், மலைப்பாதையில் யானைகளைக் கண்டால் வாகனங்களை நிறுத்தவோ, ஹாரன் அடித்து அவற்றை ஆத்திரமூட்டவோ வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது....

0 கருத்துகள்: