சனி, 27 ஜூன், 2026

கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி திடீர் மரணம் : தீவிர சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது !!!

SHARE

 கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி திடீர் மரணம் : தீவிர சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது !!!

கோவை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போக்சோ வழக்கு கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கோவை, சரவணம்பட்டி, துரைசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 57). இவர் கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய மேற்கு போலீசாரால் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.

கைதி ஜாகீர் உசேனுக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி திடீரென கடுமையான சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறை வளாக மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஜாகீர் உசேன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறை ஜெயிலர் திருமலை கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: