திங்கள், 15 ஜூன், 2026

50 மூட்டை ரேஷன் அரிசி கடத்த முயற்சி ”; மினி லாரியுடன் மடக்கி பிடித்த பொதுமக்கள் - சி.சி.டி.வி ஆதாரங்களை வைத்து தப்பி ஓடிய 3 ஆசாமிகளுக்குத் குறித்து சிவில் சப்ளை அதிகாரிகள் விசாரணை !!!

SHARE

50 மூட்டை ரேஷன் அரிசி கடத்த முயற்சி ”;  மினி லாரியுடன் மடக்கி பிடித்த பொதுமக்கள் - சி.சி.டி.வி ஆதாரங்களை வைத்து தப்பி ஓடிய 3 ஆசாமிகளுக்குத் குறித்து சிவில் சப்ளை அதிகாரிகள் விசாரணை !!!

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து, சுமார் 50 மூட்டை ரேஷன் அரிசியுடன் வந்த மினி லாரியை பொதுமக்கள் பிடித்து வைத்தனர். இந்த சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே உள்ள பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்ட மினி லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அங்கு விரைந்து சென்று லாரியை பிடித்தனர்.

அப்போது லாரியில் சுமார் 50 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில் லாரியில் இருந்த 3 பேர் அங்கு இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க முயற்சி செய்த போதும் அவர்கள் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த 54-வது வார்டு கொங்கு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

பிடிபட்ட லாரி மற்றும் ரேஷன் அரிசி தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய நபர்கள் யார் ? ரேஷன் அரிசி எங்கு இருந்து கொண்டு வரப்பட்டது ? என்பது அங்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: