செவ்வாய், 16 ஜூன், 2026

மரங்களுக்குள் மறைந்து இருந்த காட்டெருமையின் அசுரத் தாக்குதல்” ; கோவையில் விறகு வெட்டச் சென்ற இடத்தில் வயிறு கிழிந்து முதியவர் பரிதாப பலி - போலீஸார் விசாரணை !!!

SHARE

மரங்களுக்குள் மறைந்து இருந்த காட்டெருமையின் அசுரத் தாக்குதல்” ;  கோவையில் விறகு வெட்டச் சென்ற இடத்தில் வயிறு கிழிந்து முதியவர் பரிதாப பலி - போலீஸார் விசாரணை !!!

கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் 65 வயதான கிருஷ்ணசாமி. இவர் விறகு வெட்டும் வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி காலை மாங்கரை ரோட்டில் விறகு  வெட்டும் வேலைக்கு சென்ற போது மரங்களுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று கிருஷ்ணசாமியை தாக்கி உள்ளது. 

இதில்  வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தடாகம் போலிசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: