“இனி ஒரு விதி செய்வோம், போதை அரக்கனை ஒழிப்போம்”: உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில் பேரணி சென்ற அர்-ரஹ்மான் அகாடமி மாணவர்கள் - கொடியாசைத்து துவக்கி வைத்த காவல்துறை !!!
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர காவல் துறை மற்றும் அர்-ரஹ்மான் அகாடமி கட்டணமில்லா கல்வியகம் இணைந்து நடத்திய போதைப்பொருளுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி கோவை கரும்புக்கடை பகுதியில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை கரும்புக்கடை (D6) காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்துரு, கோவை மாநகராட்சியின் 86-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் கொடியசைத்து முறைப்படி துவங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் அர்-ரஹ்மான் அகாடமி நிர்வாகிகள் அப்துல் ஹக்கீம், ஜுனைது உசேன், சிராஜ்தீன், அப்துல் சத்தார், ஜுபைர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் முன்னிலை வகித்து பேரணியை வழி நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் போதைப்பொருட்களின் தீமைகளை விளக்கும் மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்று பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

0 கருத்துகள்: