மதிலைத் தாண்டிச் சாதனை படைக்கும் திருநங்கைகள்” ; வாழ்வாதார மேம்பாட்டிற்குத் தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் - கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேச்சு !!!
திருநங்கைகளின் வாழ்வாதாரம், சமூக அங்கீகாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், கெப்சரா பவுண்டேஷன் சார்பில் "மதிலை தாண்டு"என்ற சிறப்பு நிகழ்ச்சி கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, பின்னணி பாடகர் வி.வி. பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தாயார் ஷோபா சந்திரசேகர் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சம்பத்குமார், சமூகத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற போராடும் ஒவ்வொரு திருநங்கையும் ஒரு சாதனையாளரே என்று பாராட்டினார். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும், "எந்த உதவி வேண்டுமானாலும் உரிமையோடு என்னை அணுகலாம்" என நம்பிக்கையூட்டும் வகையில் தெரிவித்தார்.

0 கருத்துகள்: