வியாழன், 11 ஜூன், 2026

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பு !!!

SHARE

 பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பு !!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்றார்.

2026 ஆம் ஆண்டு நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள கலாச்சார மையத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமை வகிக்கும் இந்த 11-வது நிர்வாக குழு நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்று உள்ளனர். இன்று நடைபெற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் பங்கேற்றார்.

இந்த ஆண்டு குழுவின் கூட்டமானது மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசின் வளர்ந்த இந்தியா திட்டத்துடன் இணைப்பது குறித்து நடைபெறுகிறது.

முதன்முறையாக இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தின் தேவைகளை பிரதமரிடம் முன்வைத்து உள்ளார்.

குறிப்பாக, தமிழகத்திற்கு வராமல் நிலுவையில் உள்ள மத்திய நிதி மற்றும் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கான நிதி குறித்தும், தொழில் வளர்ச்சி திட்டங்கள், நெடுஞ்சாலை பணிகள், புதிய தொழில் முதலீடுகள், நகர்ப்புற கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நேற்றே தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், அங்கு உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ளார். இன்று காலை அங்கு இருந்து புறப்பட்டு குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் நடைபெறுகிற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: