செவ்வாய், 30 ஜூன், 2026

தனியார் ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: தலைமறைவான நபருக்கு போலீசார் வலைவீச்சு !!!

SHARE

 தனியார் ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: தலைமறைவான நபருக்கு போலீசார் வலைவீச்சு !!!

தனியார் ஹோட்டலில் பணி புரியும் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமாக ராமேஸ்வரம் உள்ளது. இதனாலேயே இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்க ஏதுவாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் 100 க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தங்கும் விடுதிகளில் ஏராளமான இளம் பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். அந்த வகையில், ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் வரவேற்பாளராக பணி செய்து வந்து உள்ளார்.

இந்த நிலையில், அந்த தனியார் ஹோட்டலுக்கு வந்த டிராவல்ஸ் உரிமையாளர் ராஜா என்பவர், அன்றைய நாளில் ஹோட்டலில் தங்கி விட்டு சென்ற விருந்தினர்களின் தகவல்களை அந்த இளம் பெண்ணிடம் கேட்டு உள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள ஹோட்டல்களில் தங்கி விட்டு செல்லும் விருந்தினர்களின் எண்களைப் பெற்று, அதன் மூலம் அவர்களைத் தொடர்ந்து சவாரிக்கு ஆள் பிடிப்பதை அங்கு உள்ள டிராவல்ஸ் உரிமையாளர்கள் வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர்.

மேலும், இதுபோன்று விருந்தினர்களின் செல்ஃபோன் உள்ளிட்ட விபரங்களை வழங்குவது ராமேஸ்வரத்தில் சர்வசாதாரணமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. அந்த வகையில், டிராவல்ஸ் உரிமையாளர் ராஜா கேட்ட தகவல்களை தருவதற்காக அந்த இளம்பெண் திரும்பிய போது அவரிடம் திடீரென பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்

இதனால் சுதாரித்து கொண்ட, ராஜா உடனே அங்கு இருந்து தப்பியோடி தலைமறைவாகி உள்ளார். மேலும், இந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்த அந்த இளம் பெண், நிகழ்வு குறித்து ஹோட்டல் மேலாளரிடம் கூறி உள்ளார். அத்துடன், அவரது கணவரிடமும் சம்பவம் குறித்து கூறி கண்ணீர் வடித்து இருக்கின்றார்.


இதனை அடுத்து இளம் பெண்ணும், அவரது கணவரும் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ராஜாவின் பாலியல் சீண்டல் குறித்து புகார் கொடுத்து உள்ளனர். இதன் பேரில், ராஜா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான டிராவல்ஸ் உரிமையாளர் ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: