வியாழன், 11 ஜூன், 2026

புதிய தென்றல் மனமகிழ் மன்றம் முன்பு பயங்கரம் ; மது போதையில் இருந்த நபரை ஆக்ரோஷமாகத் தள்ளிவிட்ட வாலிபர் - செல்போன் வீடியோ வைரல் !!!

SHARE

 புதிய தென்றல் மனமகிழ் மன்றம் முன்பு பயங்கரம் ; மது போதையில் இருந்த நபரை ஆக்ரோஷமாகத் தள்ளிவிட்ட வாலிபர் - செல்போன் வீடியோ வைரல் !!!

 "கோவையின் ‘புதிய தென்றல் மனமகிழ் மன்றம்’ முன்பாக, மது போதையில் தள்ளாடியபடி நின்று இருந்த நபர் ஒருவரை, வாலிபர் ஒருவர் அசாத்திய ஆக்ரோஷத்துடன் கீழே தள்ளிவிடும் அதிர்ச்சி ஊட்டக் கூடிய செல்போன் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 தொழில்துறை தலைநகரான கோவையில் போதைப்பொருள் சலசலப்புகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு விவகாரங்கள் அடுத்தடுத்து விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. 

அண்மையில் உக்கடத்தில் ₹10 லட்சத்து கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் பொள்ளாச்சியில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்ற மூதாட்டி சிவகாமியின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்பொழுது இந்த ‘மனமகிழ் மன்ற’ மோதல் வீடியோ வெளியாகிப் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரப் பகுதியில் உள்ள புதிய தென்றல் மனமகிழ் மன்றத்தின் முன்பாக, பகல் நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அசைக்க முடியாத மது போதையில் நிலைதடுமாறி, அங்கு இருந்த வாலிபர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

​அப்போது அங்கு இருந்த ஒரு வாலிபர், போதையில் இருந்த நபரின் செயலால் கடுமையான ஆத்திரம் அடைந்தார். 

இருவருக்கும் இடையே வார்த்தை யுத்தம் வெடித்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த வாலிபர், போதை ஆசாமியைத் தனது ‘ஃபுல் எனர்ஜி’யோடு ஆக்ரோஷமாகப் பிடித்து சாலையில் தள்ளி விட்டார். 

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்தப் போதை நபர், மீண்டும் எழுந்து வந்து தாக்க முயன்றார். மேலும் ஆத்திரம் அடைந்த வாலிபர் அவரை கீழே தள்ளி விட்டார்.

​நடுரோட்டில் அரங்கேறிய இந்த சம்பவத்தை அங்கு இருந்த பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன் கேமராவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் தட்டிவிட்டு உள்ளனர். 

தற்பொழுது இந்த வீடியோ வாட்ஸ்அப் க்ரூப்களில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: