வியாழன், 18 ஜூன், 2026

கோவையில் போலீஸ் சோதனைச் சாவடியிலேயே 'பார்' அமைத்து மது அருந்திய ஆசாமிகள் - வீடியோ வைரல் !!!

SHARE

 கோவையில் போலீஸ் சோதனைச் சாவடியிலேயே 'பார்' அமைத்து மது அருந்திய ஆசாமிகள் - வீடியோ வைரல் !!!

​ சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக வீடியோ பதிவு செய்த நபர் வேதனை !!!

 கோவை, துடியலூர் அருகே உள்ள இடிகரை பகுதியில், காவல் துறையின் பாதுகாப்புச் சோதனைச் சாவடியிலேயே  இரு நபர்கள் எவ்வித பயமுமின்றி சர்வ சாதாரணமாக டம்ளர்களில் மதுவை அளவு சரிபார்த்து ஊற்றி அருந்தும் அதிர்ச்சியூட்டும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.

​பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் காவல் துறை சார்பில் நகரின் முக்கிய எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இடிகரை பகுதியில் அமைந்து உள்ள இந்தச் குறிப்பிட்ட போலீஸ் செக்போஸ்ட்டில், பகல் நேரத்தில் போலீசார் யாரும் இல்லாத நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் அங்கு நுழைந்து உள்ளனர்.

 காவல் துறையினரின் இருக்கை போன்று அமர்வதற்கு சிமெண்ட் சிலாப் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் மது மேஜையாக மாற்றிய அந்த ஆசாமிகள், மதுப் பாட்டிலைத் திறந்து டம்ளர்களில் ஊற்றி, மது அருந்தி உள்ளனர்.

இந்த அநாகரிகமான செயல், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் செல்போன் கேமராவில் பதிவு செய்து உள்ளார். 

இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி, கோவையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறையின் பாதுகாப்புத் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: