நூலிழையில் தப்பிய உயிர் ; கோவையில் மேம்பாலத்தில் 100 அடி உயரத்தில் தொங்கிய வாலிபர் - அலறியடித்த பொதுமக்கள் சாதுரியமாக மீட்ட மெிரளவைக்கும் நிமிடம் !!!
பாலத்தின் கீழ் இருந்த மக்கள் போட்ட சத்தம்; குடிபோதையா ? அல்லது தற்கொலை முயற்சியா ? என போலீசார் விசாரணை !!!
கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இன்று மாலை தொங்கிக் கொண்டு இருந்த இளைஞரை பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
கோவை, ராமநாதபுரம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பாலத்தில் மேல் திடீரென தொங்க தொடங்கினார்.சுமார் 100 அடி உயரத்தில் இளைஞர் தொங்கிக்கொண்டு இருப்பதை, பாலத்தின் கீழி இருந்து பார்த்த பொதுமக்கள் பதறினர். பாலத்தின் கீழ் இருந்த மக்கள் சத்தம் எழுப்பிய நிலையில், பாலத்தின் மேல் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் , பாலத்தின் மேல் தொங்கிக் கொண்டு இருந்த இளைஞரை மீட்டனர். இளைஞர் குடிபோதையில் தொங்கினாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. பாலத்தின் மீது தொங்கிய இளைஞர் மீட்கப்பட்டதால் பாலத்தின் கீழ் இருந்த பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.
பாலத்தில் தொங்கிய இளைஞர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்: