சேலையைப் பிடித்து இழுத்த தி.மு.க கவுன்சிலர்கள்... மேடை ஏறித் தனி ஆளாக முழங்கிய ‘காங்கிரஸ்’ காயத்ரி: கோவை மாநகராட்சி மாமன்றத்தில் தள்ளுமுள்ளு ; பெண் கவுன்சிலர் 2 மாதங்களுக்கு அதிரடி சஸ்பெண்ட் !!!
₹40 கோடி செம்மொழி பூங்கா முறைகேடு புகாரால் வெடித்த பயங்கர தள்ளுமுள்ளு; காலி குடங்களுடன் அ.தி.மு.க-வினர், ஏரிப் பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் முற்றுகை; போர்க்களமாக மாறிய கோவை மாநகராட்சி !!!
கோவை மாநகராட்சி கூட்டத்தில் செம்மொழி பூங்காவில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மேயர் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி கோரிக்கை விடுத்ததால், காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கும், தி.மு.க கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே மன்றத்தை அவமதிப்பு செய்யும் விதமாக நடத்த காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை மேயர் ரங்கநாயகி 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் , மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தலைமையில் நடத்த இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும், மண்டல அலுவலகங்களில் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது,
இது குறித்த முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டல தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை என கூறி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.அவருடன் திமுக கவுன்சிலர்களும் ஆணையர் முன்பாக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு செம்மொழி பூங்காவில் ரூ. 40 கோடி முறையீடு நடைபெற்றது குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதிமுக 3 பேர் கவுன்சிலர்கள் குடிதண்ணீர் வழங்க கோரி காலி குடங்களுடன் தனியாக போராட்டம் நடத்தினர்.
சி.பி.ஐ, சி.பி.எம் கவுன்சிலர்கள் சின்ன வேடம் பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்க கூடாது என கூறி அவர்களும் தனியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்ட அரங்கில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், திமுக பெண் கவுன்சிலர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தி.மு.க பெண்கவுன்சிலர்கள் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் சேலையை பிடித்து இழுத்தனர். அதனை மீறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையருடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து கூச்சல் குழப்பம் முடிவுக்கு வராமல் கடும் அமளி ஏற்பட்டதால் மாமன்ற கூட்டத்தை 12 மணி வரை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பதாக மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார் . மேலும் கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி, பூபதி , இ.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகியோரை 5 பேரை இரண்டு மாத காலத்துக்கு பணியிடை நீக்கம் செய்து மேயர் ரங்கநாயகி நடவடிக்கை எடுத்தார்.
மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதம் தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது.
பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் மாநகராட்சி கூட்டம் துவங்கியது. கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மாமன்றத்தில் பேசினார். அப்போது
கோவை மாமன்ற கூட்டம் துவங்கும் முன்பதாக , காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி கூட்டத்தை அவமதிக்கும் வகையில், சுயவிளம்பரத்திற்காகஅவமதிப்பு செய்ததால் அவரை 2 மாதம் சஸ்பென்ட் செய்கின்றேன் எனவும் மற்றவர்கள் மீது நடவடிக்கை இல்லை என மேயர் ரங்கநாயகி மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

0 கருத்துகள்: