வெள்ளி, 17 ஜூலை, 2026

செம்மொழிப் பூங்கா முறைகேடு புகாரால் வெடித்த போர்க்களம் ; கோவை மாமன்றத்தில் தி.மு.க - காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் குஸ்தி - காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட் !!!

SHARE

 செம்மொழிப் பூங்கா முறைகேடு புகாரால் வெடித்த போர்க்களம் ; கோவை மாமன்றத்தில் தி.மு.க - காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் குஸ்தி - காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட் !!!

“உள்ளே சண்டை.. வெளியே தோழமை”; மேடையில் ஏறி கமிஷனருடன் மல்லுக்கட்டிய காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி - மேயர் ரங்கநாயகி எடுத்த நடவடிக்கை !!!

 கோவை மாநகராட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, அரங்கேறிய அனல் பறக்கும் மோதலில், தி.மு.க மற்றும் காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் சேலையை மடித்துக் கட்டிக் கொண்டு குஸ்தி போட்ட விவகாரம் கொங்கு அரசியலை ஒட்டுமொத்தமாக அதிரவைத்து உள்ளது.

 கோவை, மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று கூடிய நிலையில், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கடந்த தி.மு.க ஆட்சியில் செம்மொழி பூங்கா திட்டத்தில் சுமார் ரூ.40 கோடி அளவிற்குப் பெருமளவில் முறைகேடு நடந்து உள்ளதாகக் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆவணங்களை வீசி அதிரடிக் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்தனர்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க தரப்பு எதிர்ப்புக் குரல் எழுப்ப, இருதரப்பு பெண் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் முற்றி, அது தள்ளுமுள்ளாக மாறியதால் மாமன்றமே போர்க்களமாக உருவெடுத்தது.

இந்த அதிரடி அமளிக்கு இடையே, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆக்ரோஷத்தின் உச்சத்திற்குச் சென்று, மேயர் அமர்ந்து இருக்கும் மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜாவை மிரட்டும் தோனியில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 இதை அடுத்து அவையின் கண்ணியத்தைக் கெடுத்ததாகவும், அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் கூறி காங்கிரஸ் கவுன்சிலர்கள் காயத்ரி அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாமன்றக் கூட்டங்களில் பங்கேற்க முடியாதவாறு சஸ்பெண்ட் (இடைநீக்கம்) செய்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: