வெள்ளி, 17 ஜூலை, 2026

ஒய்யாரமாக உலா வந்த அரிய வகை கருஞ்சிறுத்தை: கோவை மக்கள் எடுத்த வீடியோ வைரல் !!!

SHARE

 ஒய்யாரமாக உலா வந்த அரிய வகை கருஞ்சிறுத்தை: கோவை மக்கள் எடுத்த வீடியோ வைரல் !!!

ஏற்கனவே ஆடு, கோழிகளை வேட்டையாடிய சிறுத்தையால் பீதி; தற்பொழுது கருஞ்சிறுத்தை என்ட்ரியால் எல்லையோர மக்கள் அச்சம் ; கூண்டு வைக்கக் கோரிக்கை!

கோவை, கணுவாய் பகுதியில் உள்ள அடர்ந்த மலைத்தொடரில் அரிய வகையான கருஞ்சிறுத்தை ஒன்று மிகச் சாதாரணமாக உலா வரும் மெிரளவைக்கும் வீடியோ காட்சி தற்பொழுது வெளியாகி, கோவை மற்றும் எல்லையோரக் கிராம மக்கள் இடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம், அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள எல்லைப் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவையின் புறநகர்ப் பகுதியான கணுவாய் பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடரில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்று உள்ளது. மலையின் பாறைகளுக்கு இடையே முற்றிலும் கருப்பு நிறத்தில் அந்த சிறுத்தை நடந்து செல்வதை, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன்களில் துல்லியமாக வீடியோ பதிவு செய்து உள்ளனர்.

அந்த வீடியோவில், "அக்கா இங்க பாரு.... நல்லா தெரியுது கருஞ்சிறுத்தை தான்.... எப்போ கருப்பு கலரா தெரியுது பாரு..." எனப் பொதுமக்கள் தங்களது பயத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தும் குரல்கள் பதிவாகி உள்ளன. தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, ஒட்டுமொத்த கோயம்புத்தூரையும் அதிர வைத்து உள்ளது.

கணுவாய் மற்றும் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சாதாரண சிறுத்தை ஒன்று மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து, ஏழை விவசாயிகளின் ஆடு மற்றும் கோழிகளைத் கொடூரமாக வேட்டையாடிச் சென்றது. அந்தச் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் இன்னும் ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தேடி வரும் நிலையில், தற்பொழுது அதே பகுதியில் அரிய வகை கருஞ்சிறுத்தையும் சர்வ சாதாரணமாக உலா வரத் தொடங்கியிருப்பது எல்லையோரக் கிராம மக்களைத் தூக்கமில்லாமல் தவிக்க விட்டு உள்ளது. எப்போது எந்த சிறுத்தை தங்களது குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்துமோ ? என்ற மரண பயத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

பட்டப் பகலிலும், மாலை நேரங்களிலும் குடியிருப்புக்கு மிக அருகில் உள்ள மலைகளில் கருஞ்சிறுத்தை உலா வருவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்கு முன்பாக வனத்துறையினர் உடனடியாகக் கருஞ்சிறுத்தையின் நடமாட்டத்தைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: