வெள்ளி, 31 ஜூலை, 2026

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை ரெய்டு... கோவைப்புதூர், சுங்கம் பகுதிகளில் சோதனை: பலத்த பாதுகாப்புடன் ஆவணங்கள் ஆய்வு !!!

SHARE

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை ரெய்டு... கோவைப்புதூர், சுங்கம் பகுதிகளில் சோதனை: பலத்த பாதுகாப்புடன் ஆவணங்கள் ஆய்வு !!!

வங்கிக் கணக்குகள் & கணினி பதிவுகள் 'டிராக்கிங்'; வரி ஏய்ப்பு புகாரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை !!!

கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீடு மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையை அடுத்துள்ள கோவைப்புதூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் சுங்கம் பகுதியில் உள்ள அவரது நண்பர் அப்பாஷ் ஆகியோர் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதலே பல்வேறு குழுக்களாக வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து சோதனையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வீடு மற்றும் அலுவலக வளாகங்களில் உள்ள முக்கிய ஆவணங்கள், கணினி பதிவுகள், வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இன்று இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த சோதனையின்போது வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால், இரு இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த வருமான வரித்துறை சோதனைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. சோதனை நிறைவடைந்த பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: