வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டி எனும் நகை பறித்த பிரபல கொள்ளையன் கைது - 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு !!!
கோவையில் வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவருக்கு 30 க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கோவை, சுந்தராபுரம் சேர்ந்தவர் செல்லம்மாள் வயது 78 இவர். சம்பவத்தன்று தனது வீட்டில் வெளியே அமர்ந்து இருந்தார். அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் செல்லம்மாளிடம் வாடகைக்கு வீடு ஏதாவது உள்ளதா ? என கேட்டு பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த நபர் திடீரென மூதாட்டியின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகை பறித்து விட்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து புகாரின் பேரில் சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கு இடையே மதுக்கரை பகுதியில் காவல்துறை வாகன சோதனையும் செய்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர் சுகுணா புரத்தை சேர்ந்த அராத் நிசார் என்ற நிஸாருதீன் என்பது மூதாட்டியிடம் நகை பறித்தவர் என்பது தெரிய வந்தது. அத்துடன் மேட்டூர் பகுதியில் ஒரு கடையில் நின்ற பெண்ணிடம் இரண்டு பவுன் நகை பறித்தது, மதுக்கடையில் 3 பெண்களிடம் நகை பதித்தது உட்பட பல்வேறு வழக்குகள் தொடர்புடையவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் மீது நகைப் பறிப்பு, வழிப்பறி திருட்டு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பிரபல கொள்ளையனாக வலம் வந்தது தெரியவந்தது. அவரை காவல்துறை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: