நீங்க 4 பேரு கூட போலாம் மேடம்... இதே பசங்க போனா ஃபைன்” ; கோவையில் ட்ரெண்டாகும் வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் - கோவையில் வைரலாகும் செல்போன் வீடியோ !!!
கோவை அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பெண்களின் வீடியோ, “நீங்க தாராளமா மூனு பேர் இல்ல, நாலு பேரு கூட போலாம் மேடம், ஆனா இதே பசங்க போனா ஆட்டோமேட்டிக்கா ஃபைன் வந்துரும்” என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.கோவை மாநகரின் மிக முக்கியப் பிரதான சாலையான அவிநாசி சாலையில் போக்குவரத்து விதிகளையும், விபத்துகளையும் கட்டுப்படுத்தும் பொருட்டு போக்குவரத்துப் பிரிவு போலீஸார் தினந்தோறும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியில் அந்த வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பெண்கள் (Triples) விதியை மீறிப் பயணித்து வந்தனர்.
அப்பகுதியில் சென்ற மற்றொரு வாகன ஓட்டி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார்.
அந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள்
“நீங்க தாராளமா மூனு பேர் இல்ல, நாலு பேரு கூட போலாம் மேடம்... உங்களை யாரும் தப்பு சொல்ல மாட்டாங்க. இதே பசங்க (இளைஞர்கள்) இப்படிப் போனா உடனே ஆட்டோமேட்டிக்கா ஃபைன் (Fine) வந்து விழுந்துரும்” என்று கலகலப்பாகக் பதிவு செய்து வருகின்றனர்.
இளைஞர்கள் ட்ரிபிள்ஸ் சென்றால் உடனடியாக அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை பாயும் நிலையில் வீடியோ பிரதிபலிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 கருத்துகள்: