கோவையில் பண விவகாரத்தில் முற்றிய பஞ்சாயத்து: சக தொழிலாளி கத்திக் குத்து - தடுத்த 9 வயது சிறுமிக்கும் நேர்ந்த கொடூரம் !!!
விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா ( 32). இவர் தற்போது சிங்காநல்லூர் அருகே ராவத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
அவருடன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் (வயது 36 )என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா அவர் மோட்டார் சைக்கிள் விற்ற பணம் 10 ஆயிரம் மற்றும் சம்பள பணம் 20 ஆயிரம் ஆகியவற்றை அழகரிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து ராஜா, அழகரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். அப்போது அழகர் உன்னிடம் நான் எப்போது பணம் வாங்கினேன் என்று கூறி பணத்தை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஸ்பின்னிங் மில் அருகே உள்ள குடோன் அருகில் வீட்டு பகுதியில் ராஜா நின்றிருந்த போது அங்கு வந்த அழகர் அவரிடம் தகராறு செய்து காய்கறி நறுக்கும் கத்தியால் அவரை குத்தினார்.
இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த ராஜாவின் 9 வயது மகள் வெளியே ஓடி வந்தார்.
தனது தந்தையை அழகா குத்துவதை பார்த்ததும் அதை தடுக்க முயன்று உள்ளார். அப்போது அவரையும் அழகா குத்தியுள்ளார். இதில் அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அங்கு பொதுமக்கள் திரண்டதால் அழகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கத்திக்குத்தி காயம் அடைந்த ராஜா மற்றும், அவரது மகளை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜா சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்: