வெள்ளி, 10 ஜூலை, 2026

போலீசாக இருந்து ரவுடியாக மாறிய வாலிபர் - காங்கிரஸ் பிரமுகர் கடத்தலில் தலைமறைவானவர் பற்றி பரபரப்பு தகவல் !!!

SHARE

 போலீசாக இருந்து ரவுடியாக மாறிய வாலிபர் - காங்கிரஸ் பிரமுகர் கடத்தலில் தலைமறைவானவர் பற்றி பரபரப்பு தகவல் !!!

காங்கிரஸ் பிரமுகர் கடத்தலில் தலைமறைவான வாலிபர் போலீசாக இருந்து ரவுடியாக மாறியது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவை, எஸ்.ஐ.எஸ்.எஸ் காலனி சேர்ந்தவர் தனசேகர். காங்கிரஸ் பிரமுகர். இவரை கடந்த ஐந்தாம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்தி ரூபாய் 2 கோடி கேட்டு மிரட்டியது. பின்னர் அவரை பாலக்காடு சாலையில் இறக்கிவிட்டு தப்பி சென்றது.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சியை சேர்ந்த வைரப் பெருமாளை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இடிகரையைச் சேர்ந்த சேர்ந்த போலீஸ் கார்த்திக், திருச்சியை சேர்ந்த அன்பு மூர்த்தி உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

இதில் போலீஸ் கார்த்திக் என்பவர் தான் அந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு தனசேகரை கடத்தி உள்ளார். ஆள் மாற்றத்தில் அவரை கடத்தி பாதி வழியில் இறக்கி விட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தனசேகரை தெரிந்து கடத்தியதும், ஆனால் திடீரென அவரை இறக்கி விட்டு சென்றதும் தெரியவந்து உள்ளது. எதற்காக அவர் பாதி வழியில் இறக்கி விடப்பட்டார் ? என்பது தெரியவில்லை, தலைமறைவாக உள்ள போலீஸ் கார்த்திக்கை பிடித்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும் என தெரிகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது;-

கோவை அருகே உள்ள இடிகரையைச் சேர்ந்த கார்த்திக் கடந்த 2003 ஆம் ஆண்டு பட்டாலியன் பிரிவில் போலீசாக பணியாளர் பணிக்கு, சேர்ந்தார். பின்னர் ஒரு இளம் பெண்ணுடன் பழகி பணத்தை பறித்ததாக அவர் மீது புகார் வந்தது. இது தவிர மேலும் பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருந்தது. இதனால் அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அவர் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டார். அவர் மீது போத்தனூரில் ஒரு கொலை வழக்கு, காட்டூர், சிங்காநல்லூர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக காரை அடமானம் வைத்து பணம் பெறுபவர்களின் காரை திரும்ப கொடுக்காமல், விற்று பணம் சம்பாதிப்பது, காரை திருடுவது, சிறையில் இருந்து வெளியே வரும் பிரபல ரவுடிகளின் தொடர்பு வைத்துக் கொண்டு அடிக்கடி குற்றச் செயலில் ஈடுபடுவது என்ற ரவுடி போல் வலம் வந்து உள்ளார். அது போன்ற காரை அடமானம் வைப்பது தொடர்பாகத் தான் காங்கிரஸ் பிரமுகருக்கும், போலீஸ் கார்த்திக்கும் இடையே பிரச்சனை இருந்தது. இதனால் தான் அவரை கடத்தி உள்ளார். எனவே தலைமறைவாக இருக்கும் போலீஸ் கார்த்திகை பிடித்தால், தான் முழு விவரம் தெரியவரும். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் தலைமறைவான 5 பேரையும் பிடித்து விடுவோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: