வியாழன், 9 ஜூலை, 2026

பார்சல் பஞ்சாயத்தில் பாய்ந்த சோடா பாட்டில் : கோவையில் வேலை தேடிச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - த.வெ.க-வினர் 3 பேர் கைது !!!

SHARE

 பார்சல் பஞ்சாயத்தில் பாய்ந்த சோடா பாட்டில் : கோவையில் வேலை தேடிச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - த.வெ.க-வினர் 3 பேர் கைது !!!

"வேலை செய்யலன்னா ஏன்டா இங்க நிக்கிற?" - பேரூர் அருகே வெறித்தனம் காட்டிய த.வெ.க ஆட்கள்; மண்டை உடைந்து வாலிபர் ஜி.ஹெச்சில் அனுமதி!

​கோவை, பேரூர் அருகே செட்டிபாளையம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், வேலை கேட்பதற்காக இந்திரா நகரைச் சேர்ந்த கோகுல கண்ணன் என்பவர் சென்றுள்ளார். அப்போது, அங்கு பார்சல் வாங்குவதற்காக வந்த பரட்டை அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மதிவண்ணன், கார்த்தி, குமார் ஆகிய மூன்று பேர், அங்கிருந்த கோகுல கண்ணனிடம் பார்சல் கட்டித் தருமாறு கேட்டு உள்ளனர்.

​அதற்கு கோகுல கண்ணன், "நான் இங்கு வேலை செய்யவில்லை" என்று கூறியுள்ளார். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. "வேலை செய்யவில்லை என்றால் ஏன் இங்கு நிற்கிறாய்?" எனக் கேட்டு, அந்த மூன்று பேரும் கோகுல கண்ணனை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அருகில் இருந்த கோலி சோடா பாட்டிலால் அவரது மண்டையின் பின்புறம் பலமாகத் தாக்கியதில் அவருக்குப் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது.

​தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், காயமடைந்த கோகுல கண்ணனை மீட்ட அப்பகுதி மக்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், பேரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதிவண்ணன், கார்த்தி, குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) அமைப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: