சனி, 4 ஜூலை, 2026

உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் குளறுபடியா? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் !!!

SHARE

 உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் குளறுபடியா? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் !!!

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட உதவி பேராசிரியர் பணி நியமன தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் நிகழ்ந்து உள்ளதாக புகார் எழுந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்து உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கு 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான பணிநாடுநர்களை நேரடி நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2025- ஆம் ஆண்டு அக்டோபர் 16- ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2025- ஆம் ஆண்டு டிசம்பர் 27- ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் 56 பாடங்கள் சார்ந்த மதிப்பெண் பட்டியல் நடப்பாண்டு ஜூன் 25- ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் கணினி அறிவியல் (Computer Science), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (Computer Application) என்ற பாடத்தில் இணையதள விண்ணப்ப எண்.24ASC032858 சார்ந்த விண்ணப்பதாரரின் பிறந்த தேதி விண்ணப்பதாரரால் குறிப்பிட்டு பதிவேற்றம் செய்துள்ளார். அதன்படி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இணையதளத்தில் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறு பிறந்த தேதியை குறிப்பிட வேண்டிய கலத்தில் விண்ணப்பதாரர் தனது பிறந்ததேதி 27/09/1991 என குறிப்பிடுவதற்கு பதிலாக அன்னாரின் பத்தாம் வகுப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள TMR CODE NO. & DATE பகுதியில் உள்ள தேதியை 05/06/2006 எனக் குறிப்பிட்டு தவறாக பதிவேற்றம் செய்து உள்ளார்.

25ASC041667 என்கிற விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயருக்குப் பதிலாக அன்னாருடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எண்ணை AA 2772011 என்பதைக் குறிப்பிட்டு விண்ணப்பதாரரால் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், 22/12/2025 அன்று தனது பெயரில் திருத்தம் செய்யக் கோரி இணையதள விண்ணப்ப நகலுடன் இணைக்கப்பட்ட அடையாள ஆதாரத்துடன் விண்ணத்தாரரிடம் இருந்து மனு பெறப்பட்டது.

இவ்விவரங்கள் சரியென உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில், விண்ணப்பத்தாரரை 27/12/2025 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் அனுமதிக்க முதன்மைக் கல்வி அலுவலரின் வாயிலாக விண்ணப்பதாரர் சார்ந்த தேர்வு மையத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. விண்ணப்பத்தாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்த பெயர் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே தேர்வறை அனுமதிச் சீட்டு வழங்குதல் மற்றும் தேர்வு மதிப்பெண் வெளியீடு ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: