புதன், 22 ஜூலை, 2026

"ஓடுங்கடா ஓடுங்க! சொன்ன பேச்சை கேட்கிறதில்ல... எல்லாம் கொழுப்பு" ; ஆக்ரோஷமாக விரட்டிய 'பாகுபலி' யானை - அலறியடித்து ஓடிய வாலிபர்கள் !!!

SHARE

 "ஓடுங்கடா ஓடுங்க! சொன்ன பேச்சை கேட்கிறதில்ல... எல்லாம் கொழுப்பு" ; ஆக்ரோஷமாக விரட்டிய 'பாகுபலி' யானை - அலறியடித்து ஓடிய வாலிபர்கள் !!!

 ஆபத்தான முறையில் நெருங்கிச் சென்று வாலிபர்கள் - நூலிழையில் உயிர் தப்பிய பகீர் வீடியோ வைரல் !!!

 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ‘பாகுபலி’ என்ற ஒற்றைக் காட்டு யானையை ஆபத்தான முறையில் மிக அருகில் நெருங்கிச் சென்று சீண்டிய வாலிபர்களை, ஆக்ரோஷமாகப் பிளிறியபடி விரட்டி அடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தைக் குலுக்கி வருகிறது.

 மேட்டுப்பாளையம், ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி மற்றும் தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வலம் வரும் இந்த ‘பாகுபலி’ யானை, பகல் நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியிலும், இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக விளைநிலங்களிலும் புகுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை வேளையில் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, தார்ச் சாலையைக் கடந்து மறுபுறம் இருந்த காட்டுக்குள் செல்ல முயன்றது. இதைக் கண்டு அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் சில இளைஞர்கள், எச்சரிக்கையையும் மீறி யானையை மிக அருகில் நெருங்கிச் சென்றனர். 

 இதனால் கடும் கோபம் அடைந்த பாகுபலி யானை, நொடிப் பொழுதில் அசுர வேகத்தில் பிளிறிக் கொண்டு அவர்களை நோக்கித் தாக்கப் பாய்ந்தது.

யானை சீறி வருவதைக் கண்டதும், "ஓடுங்கடா ஓடுங்க... சொன்ன பேச்சை கேட்கிறதில்ல... எல்லாம் கொழுப்பு!" என அப்பகுதியில் குடியிருந்த பெண் ஒருவர் கூச்சலிட்டு உள்ளார். 

இதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: