புதன், 5 ஆகஸ்ட், 2026

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால் தகராறு ; பட்டதாரி வாலிபர் கத்தியால் குத்தி கொலை - 8 பேர் கைது, ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு !!!

SHARE

 மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால் தகராறு ; பட்டதாரி வாலிபர் கத்தியால் குத்தி கொலை - 8 பேர் கைது, ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு !!!

கோவையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால், ஏற்பட்ட தகராறு பட்டதாரி வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சென்னை, வியாசர்பாடி சேர்ந்தவர் நவீன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்தார். படித்து முடித்ததும், சென்னை சென்று விட்டார். அவ்வப்போது கோவை வந்து தனது நண்பர்களை சந்தித்து செல்வது வழக்கம். அதன்படி அவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவை வந்தார்.

பின்னர் அவர் உடையம் பாளையத்தில் உள்ள அசோக் நகரில் நண்பர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று தங்கி இருந்தபடி கோவையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சென்று வேலை தேடி வந்தார். நவீனின் நண்பர்கள் இருசக்கர சைக்கிளில் அசோக் நகர் மற்றும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வேகமாக செல்வதை வாடிக்கையாக வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று முன்தினம் நவீனின் நண்பர்கள் இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று உள்ளனர். உடனே அந்த பகுதியில் சேர்ந்த சந்தோஷ் என்பவர் அந்த நபர்களை பிடித்து தாக்கியதுடன், எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இரண்டு பேரும் நவீனிடம் சென்று நடந்ததை கூறி உள்ளனர்.

இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் தனியாக அந்தப் பகுதியில் நடந்து சென்றார். அதை நவீன் மற்றும் நண்பர்கள் பார்த்ததுடன் அவரை தங்களுடைய அறைக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதனால் ஆக்கிரம் அடைந்த சந்தோஷ் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து விக்னேஷ் உட்பட ஒன்பது பேர் வந்தனர். பின்னர் அவர்கள் 9 பேரும் சேர்ந்து நவீன் தங்கியிருக்கும் அறைக்கு சென்றனர். அந்த அறையில் நவீன் உட்பட ஐந்து பேர் இருந்தனர். அந்த ஒன்பது பேரும் சேர்ந்து நவீன் மற்றும் அவருடைய நண்பர்களை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியை எடுத்து நவீனில் நெஞ்சில் குத்தி விட்டு தப்பி ஓடினர். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த நவீன் தான் தங்கி இருந்த அறையை விட்டு தள்ளாடியபடி வெளியே நடந்து வந்தார்.

பின்னர் அவர் ஒரு வீட்டின் முன்பு சென்று மயங்கி விழுந்தது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறியும் பீளமேடு காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை அடுத்து காவல்துறையினர் சந்தோஷ் உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தலைமறைவாக உள்ள நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: