திங்கள், 10 ஆகஸ்ட், 2026

இந்தியாவின் சுதந்திர தினம் ; கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரம் - வெளி மாநில முதல் வெளிநாடுகள் வரை விற்பனையில் களை கட்டும் கோவையில் உள்ள ஸ்கிரீன் பிரிண்டிங்...

SHARE

 இந்தியாவின் சுதந்திர தினம் ; கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரம் - வெளி மாநில முதல் வெளிநாடுகள் வரை விற்பனையில் களை கட்டும் கோவையில் உள்ள ஸ்கிரீன் பிரிண்டிங்... 

இந்தியா தனது 80 வது சுதந்திர தினத்தை 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடுகிறது. இது பிரிட்டி யாரிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

இது குறித்து ஆரம்ப காலத்து முதல் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர் கூறும் போது ;

ஆரம்ப காலத்தில் இருந்து குறிப்பாக கேரளாவில் அதிகளவில் ஸ்கிரீன் பிரிண்டிங் கொடுப்பதாகவும், கையில் பிரிண்டிங் செய்வது அதிகமாக வாங்குவதாகவும் மிஷினில் பிரிண்ட் செய்வது அவசர தேவைக்காக மிஷின் பிரிண்டிங் வாங்கிக் கொள்கின்றனர் அது விளையாட்டு துறைகளில் அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் நாங்கள் முடிந்த அளவு 15 முதல் 30 அடி வரை அதற்கு மேல் குறிப்பாக ரயில் நிலையம் ஈசா யோகா மையம் இந்தோனேசியா நாடு வெளிநாடு இந்தியாவின் அடையாளமாக தெரிய கொடிகளையும் ஒரு மீட்டர் அளவு தயார் செய்து கொடுத்துள்ளதாகவும் கூறியவர் 6 மீட்டர் நீளம் வரையும் தயார் பண்ணி உள்ளதாகவும் பின்னர் ராணுவத்திலிருந்தும் ஆடர்கள் வருவதாகவும் அதனால் இது இந்த தொழில் மூன்று நான்கு மாதங்கள் வேலை கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்

என்னோட பெயர் ராஜேந்திரன் கடந்த 45 ஆண்டு காலமாக கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்ப காலத்தில் ஒன்னு ரெண்டு கொடிகள் வரைந்து கொண்டு சென்றதாகவும் பிறகு 1977 இல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கொடி பட்டி தொட்டி எல்லாம் பறந்தது காரணம் அந்த கருப்பும் சிகப்பும் துணி அண்ணா உருவம் வரைய வேண்டி இருந்ததால் பிரிண்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது அப்பொழுது அந்த காலத்தில் அதிகமாக வந்ததால் எங்களுக்கு அதிசியமான ஆர்டர்கள் கிடைத்தது அதையே நாங்கள் பிரிண்டிங் செய்து அது மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்து காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் ராட்டை ஆரம்ப காலத்தில் அதிகமாக வந்ததாகவும் அப்புறம் சிபிஐ கதிர் அரிவாள் இந்த மூன்று கொடிகள் கலந்த 1980களில் நாங்கள் பிரிண்ட் செய்து கொண்டு இருந்ததாகவும் கூறியவர் அன்று முதல் நாங்கள் அனைத்து கொடியையும் தயார் செய்து கொடுத்துள்ளதாகவும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாக்களில் பொங்கல் விழாக்களிலும் கோவில் விழா கும்பாபிஷேக விழா பாராளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்ற தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டங்களுக்கு ஒவ்வொரு மதங்களுக்கும் வழிபடக்கூடிய ஹிந்து முஸ்லிம் இஸ்லாமியர் ஆகிய மதங்களிலும் ஒவ்வொரு விழாக்கள் கொண்டாடுகிறார்கள் வருடம் முழுவதும் எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது இருந்தபோதிலும் சுதந்திர தினத்தில் அதிக அளவில் நாங்கள் தேசியக் கொடியை தயாரித்ததாகவும் சுவர் 8.10 சைஸ் முதல் 15, 30 அடி வரை தேசிய கொடிகள் அசோக சக்கர முதல் 42 இஞ்சி உயரம் வரை கதர் வெல்வெட்டு சூப்பர் காட்டன் துணி போன்ற ரகங்களில் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் பிரிண்டிங் செய்து தைத்து ட்ரெண்டிங் செய்து அனுப்புவதால் பல்வேறு தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு இரண்டு முறை வந்தாலும் வேலை உள்ளதாகவும் முழு நேரம் கவனம் செலுத்தி இந்த வேலையை செய்வதாகவும் கூறியவர் நமது நாட்டில் ஒவ்வொரு வல்லரசு நாடாக உருவாகும் என்ற நம்பிக்கையில் தான் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை காண முடிகிறது அதனால் தேசியக்கொடி அதிக அளவில் விற்பனையாகிறது என்றும் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்கள் விளையாட்டுத்துறை சேர்ந்த நண்பர்கள் இப்படி பல்வேறு அமைப்புகள் ஆதரவு கொடுப்பதால் இந்த தேசியக்கொடி நமது நாடு வல்லரசாக உருவாகும் என்ற நம்பிக்கையை தயார் செய்வதாக கூறினார்

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: