வியாழன், 6 ஆகஸ்ட், 2026

வீட்டின் வாசலில் கொட்டிக் கிடந்த ரத்தக்கரை ; செய்வினை பயத்தில் குடும்பத்தினர் !!!

SHARE

 வீட்டின் வாசலில் கொட்டிக் கிடந்த ரத்தக்கரை ; செய்வினை பயத்தில் குடும்பத்தினர் !!!

போலீஸாரின் தீவிர விசாரணையில் வெளிவந்த நிஜ பின்னணி : சாய்பாபா கோவையில் பரபரப்பு !!!

 கோவை, சாய்பாபா காலனியில் வீட்டின் வாசலில் ரத்தக்கரை கொட்டிக் கிடந்ததால், மனிதர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்தவரின் ரத்தமா அல்லது "செய்வினை" ஏதேனும் வைக்கப்பட்டு இருக்குமோ ? என அச்சம் அடைந்த குடும்பத்தினருக்கு, அது கோழியின் ரத்தம் எனப் போலீஸ் பரிசோதனையில் தெரியவந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கோவை, சாய்பாபா காலனி, ஆனந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் இன்று காலை வழக்கம் போல் வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்த போது, வீட்டின் நுழைவு வாயிலில் ரத்தக் கரைகள் சிந்திக் கிடப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

 நள்ளிரவு நேரத்தில் வீட்டின் வாசலிலேயே ரத்தம் சிந்தப்பட்டு இருந்ததால், யாரேனும் தாக்குதல் ஈடுபட்டு படுகாயம் அடைந்து ரத்தம் சிந்தியதா ?, யாராவது செய்வினை அல்லது மூடநம்பிக்கை சார்ந்த விபரீத நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பார்களோ ? என்ற அச்சத்திலும், பீதியிலும் குடும்பத்தினர் உறைந்தனர்.

இது குறித்து உடனடியாகச் சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் வாசலில் இருந்த ரத்த மாதிரிகளைச் சேகரித்துத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடயவியல் ஆய்வகப் பரிசோதனையின் முடிவில், அங்குச் சிந்திக் கிடந்தது மனித ரத்தம் அல்ல என்பதும், அது கோழியின் ரத்தம் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

 கோழி ரத்தம் சிந்தப்பட்டு இருந்ததால், யாராவது செய்வினை அல்லது மூடநம்பிக்கை சார்ந்த விபரீத நடவடிக்கையா ? என தெரியாமல் தவித்து வரும் குடும்பத்தினர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: