வடிவேலு காமெடி பாணியில் "தென்னை மரத்தைக் காணோம்" ; மரத்தை வேரோடு பிடுங்கித் தோளில் சுமந்து சென்ற யானை - வைரல் வீடியோ !!!
காலையில் எழுந்து பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி: இணையத்தைக் கலக்கும் யானையின் கியூட் லீலை !!!
திரைப்படங்களில் நகைச் சுவை நடிகர் வடிவேலு "கிணற்றைக் காணோம்" எனப் புகார் அளித்து மக்களைச் சிரிக்க வைத்த காட்சியை அனைவரும் பார்த்து இருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையிலேயே காலையில் எழுந்து பார்த்த உரிமையாளருக்குத் தனது தோப்பில் இருந்த தென்னை மரத்தைக் காணவில்லை எனத் தேட வைத்த வினோத சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
யானை ஒன்று மிகப்பெரிய தென்னை மரத்தை அப்படியே வேரோடு பிடுங்கி, அதனைத் தனது தோளில் மிகச் சாதாரணமாகச் சுமந்து கொண்டு கூலாக நடந்து செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இரவு வரை தோப்பில் கம்பீரமாக இருந்த தென்னை மரம், காலையில் எழுந்து பார்த்த போது காணாமல் போனதைக் கண்டு தோப்பின் உரிமையாளர் வடிவேலு பாணியில் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அங்கு உள்ள காட்சிகளைப் பார்த்த போது தான், நள்ளிரவில் வந்த யானை ஒன்று தென்னை மரத்தை வேரோடு பிடுங்கித் தூக்கிச் சென்றது தெரியவந்தது.
தென்னை மரத்தைச் சுமை தூக்கும் தொழிலாளி போலத் தன் தோளில் யானை சர்வ சாதாரணமாகச் சுமந்து செல்லும் இந்த வீடியோ பதிவு, நெட்டிசன்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் சிரிப்பலையிலும் ஆழ்த்தி வருகிறது.

0 கருத்துகள்: