வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

SHARE

கஞ்சா விற்றதை வெளியே சொன்னதால் தொழிலாளியை கொலை செய்தோம் - கைதான இரண்டு பேர் வாக்குமூலம் !

கஞ்சா விற்றதை வெளியே சொன்னதால் பச்சை குத்தும் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைதான இரண்டு பேர் போலீசில் வாக்கு மூலம் அளித்து உள்ளனர்.

திருச்சியை சேர்ந்த தேவதாஸ். இவர் கோவை, திருப்பூர் மாவட்டம் எல்லையான கரணம்பேட்டையில் தங்கி பச்சை குத்தும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கருமத்தம்பட்டி அருகே ராமாட்சியம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டி இருக்கும் டாஸ்மார்க் மது கடைக்கு சென்றனர்.

அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், அசோக் ஆகியோர் அவருக்குள் ஏற்பட்ட தகராறு இரண்டு பேரும் சேர்ந்து தேவதாசை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித், அசோக் ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் கருமத்தம்பட்டி காவல்துறையில் சரணடைந்தனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான இரண்டு பேரும் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் கூறும் போது;

ராமாட்சியம்பாளையம் மதுக்கடைக்கு தேவதாஸ் சென்றார். அங்கு ரஞ்சித், அசோக் ஆகியோர் கஞ்சா விற்று உள்ளனர். அதை தேவதாஸ் கேட்ட போது அவர்கள் கொடுக்காததால், தகராறு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் கஞ்சா விற்பதை தேவதாஸ் அவருக்கு தெரிந்தவர்களிடம் கூறி உள்ளார். இதை அறிந்த ரஞ்சித், அசோக் நேற்று முன்திடம் ராமாட்சியம்பாளையம் மதுக்கடை அருகே இருந்த தேவதாஸ் இடம் கேட்டு உள்ளனர்.

பின்னர் அவர்கள் நொய்யல் ஆற்றங்கரையோரம் நடந்து சென்ற தேவதாசை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை வெளியே சொன்னது குறித்து கேட்டு உள்ளனர். அப்பொழுது அவர் தன்னிடம் தகராறு செய்தால், நீங்கள் கஞ்சா விற்பதை காவல்துறையில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் இரண்டு பேரும் கத்தியால் தேவதாஸ் வராமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் காவல் துறையினருக்கு பயந்து சரண் அடைந்து உள்ளனர். என்றும் அவர் வாக்குமூலத்தில் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: