செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

கோவையில் பரபரப்பு: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை ? சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாக்குதல் - அறைக்கு சென்ற நிலையில் உயிரிழப்பு !!!

SHARE

 கோவையில் பரபரப்பு: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை ? சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாக்குதல் - அறைக்கு சென்ற நிலையில் உயிரிழப்பு !!!

கோவை, மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த மாணவர், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மலுமிச்சம்பட்டியில் இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த அமுதன் என்ற மாணவருக்கும், சக மாணவர்கள் சிலருக்கும் இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறு முற்றிய நிலையில், சக மாணவர்கள் அமுதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அமுதன், பின்னர் தனது அறைக்கு சென்று படுத்து உள்ளார். இந்த நிலையில், அமுதன் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து தகவல் அறிந்ததும், செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மாணவர் அமுதன் எப்படி உயிரிழந்தார் ? சக மாணவர்கள் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக அவர் உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மேலும், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாணவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போலீசாரின் விசாரணை முடிவில் மாணவர் உயிரிழந்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: