ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

"கர்நாடகா எல்லையில் பரபரப்பு" - கரும்பு லாரியை மடக்கி அட்ராசிட்டி செய்த ஒற்றை யானை - அலறிய மாணவர்கள், வைரல் வீடியோ !!!

SHARE

 "கர்நாடகா எல்லையில் பரபரப்பு" - கரும்பு லாரியை மடக்கி அட்ராசிட்டி செய்த ஒற்றை யானை - அலறிய மாணவர்கள், வைரல் வீடியோ !!!

சாலையில் கரும்பு கட்டுகளை இழுத்துப் போட்டு ருசித்த யானை: பயத்துடன் கூச்சலிட்ட பொதுமக்கள் !

​ தமிழக - கர்நாடக எல்லையான பந்திப்பூர் வனப்பகுதியில், கரும்பு ஏற்றி வந்த லாரியை ஒற்றை யானை ஒன்று மறித்து, அதில் இருந்த கரும்புகளை இழுத்துப் போட்டுச் சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பந்திப்பூர் புலிகள் காப்பகச் சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அவ்வழியாகக் கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

​அப்போது, அடர்ந்த வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய 'ஒற்றை யானை' ஒன்று, சாலையின் குறுக்கே வந்து கரும்பு லாரியை வழிமறித்து நிறுத்தியது.

லாரியை மறித்த யானை, தனது தும்பிக்கையால் லாரியில் அடுக்கப்பட்டு இருந்த கரும்பு கட்டுகளை ஒவ்வொன்றாக கீழே இழுத்துப் போட்டு, நடு ரோட்டிலேயே நிதானமாகச் சாப்பிடத் தொடங்கியது.

​அந்த நேரத்தில் அவ்வழியாகப் பள்ளி வாகனத்தில் வந்த மாணவர்கள் யானையைக் கண்டு பயத்தில் அலறினர். மேலும், லாரியின் பின்னால் நின்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் யானையை காட்டுக்குள் விரட்டுவதற்காகச் சத்தமிட்டுக் கூச்சலிட்டனர். ஆனால், எதுபற்றியும் கவலைப்படாத அந்த யானை, கரும்புகளைச் சாப்பிட்டு முடித்த பின்னரே மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.

யானை கரும்பு லாரியை மடக்கி, கரும்புகளை இழுத்துப் போட்டுச் சாப்பிட்ட இந்தக் காட்சியை அங்கு இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார்.

​தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவித் தீயாகப் பரவி வருகிறது. 

அடர்ந்த வனப்பகுதிச் சாலைகளில் செல்லும்போது வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது அவற்றிடம் நெருங்கும் வகையிலோ வாகன ஓட்டிகள் செயல்படக் கூடாது என வனத்துறையினர் மீண்டும் எச்சரித்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: