"லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!
"கைத்தறி நெசவாளர்களுக்கு நாம் செய்யும் சிறந்த உதவி அவர்களின் பொருட்களை வாங்குவதே!"
கோவையில் நடைபெற்ற கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல திரைப்பட நடிகை அம்பிகா, கைத்தறி உடைகளின் முக்கியத்துவம் குறித்துப் சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகை அம்பிகா பேசும்போது:
"ஒரு கைத்தறி நெசவு ஆடை அலங்கார நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறேன் என்பதால், அதற்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு லுங்கி மற்றும் ஒரு கேரளா சேலையை (Kerala Saree) புதிதாக வாங்கி, அவற்றை ஒன்றாக இணைத்துத் தைத்து இப்படி ஒரு ஆடையை அணிந்து வந்து உள்ளேன்.
'லுங்கி டான்ஸ்' ஆடத் தெரிந்த நமக்கு, இப்படி 'லுங்கி சேலை' கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை கைத்தறி ஆடைகள் மீது இன்றைய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
உலகிலேயே மிகச் சிறந்த ஓவியர்கள் யார் ? என்று கேட்டால், அது கைத்தறி நெசவாளர்கள் தான் என்று நான் சொல்வேன். நூல்களால் அவர்கள் நெய்யும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கலைப்படைப்பு. இன்றைய மக்கள் அனைவரும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்கள் கஷ்டப்பட்டுத் தயாரித்த கைத்தறிப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய சந்தோஷம்," எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்: