சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூபாய் 2.5 கோடி தங்கம் கடத்திய இரண்டு பேர் சிக்கினார்.
கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு கோவை வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது இரண்டு பேரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு முழுமையாக சோதனை நடத்தினார்கள்.
இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேசவன் என்பவர் தனது உள்ளாடைக்குள் தங்க சங்கிலியை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதை கண்டறிந்த அதிகாரிகள் 835 கிராம் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 31 லட்சத்து 93 ஆயிரம் ஆகும் இதனால் கேசவன் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் வேலம்பட்டியை சேர்ந்த வீரப்பன் ரங்கசாமி என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது அவரது உள்ளாடைக்குள் 736 கிராம் எடை உள்ள நகைகள் மற்றும் தங்க கட்டி துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதிகாரிகள் அவரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் 1 கோடியே 16 லட்சத்தி 28 ஆயிரம் ஆகும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 2 கோடியே 47 லட்சம் ஆகும்
அவர்கள் தங்கத்தை கடத்தி யாருக்கு ? விற்பனை செய்ய வந்தனர் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான கேசவன் வீரப்பன் ரங்கசாமி ஆகியோர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதில் கேசவன் சென்னை புழல் சிறையிலும், வீரப்பன் ரங்கசாமி கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

0 கருத்துகள்: