வியாழன், 2 ஏப்ரல், 2026

கோவை மத்திய சிறை : முன் விரோதத்தில் வாலிபரை சரமாறியாக தாக்கிய கைதிகள் - முகத்தில் டீயை ஊற்றியதால் பரபரப்பு !!!

SHARE

 கோவை மத்திய சிறை : முன் விரோதத்தில் வாலிபரை சரமாறியாக தாக்கிய கைதிகள் - முகத்தில் டீயை ஊற்றியதால் பரபரப்பு !!!

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரம் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் உள்ள பி ப்ளாக் 29 வது அறையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள விலாங் கட்டுரை சேர்ந்த சகாதேவன் ( 29) என்பவரும் அடைக்கப்பட்டு உள்ளார். 

இவர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கில் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கோர்ட் உத்தரவின் படி கோவை மத்திய சிறைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார். 

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் சகாதேவன் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கில் பார்த்தா என்ற சிரஞ்சீவி என்பவரும் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கும் சகாதேவனுக்கும் திருப்பூர் திரையில் இருந்த போது ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்து உள்ளது.

சம்பவத்தன்று மாலையில் சிறைச்சாலையில் கைதிகளுக்கு டீ வழங்கப்பட்டது. அப்போது. சகாதேவன் டீ குடிப்பதற்காக சென்று உள்ளார். 

அப்போது அவரைப் பார்த்தா என்ற சிரஞ்சீவி திருப்பூர் சிறைச்சாலையில் நடந்த சம்பவம் குறித்து மீண்டும் பேசி உள்ளார். 

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. திடீரென்று பார்த்தா என்று சிரஞ்சீவி மற்றும் அவரது நண்பர்கள் கண்ணன், ரியாஸ் ஆகியோர் சேர்ந்து சகாதேவனை சரமாரியாக கைகளால் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனால் அங்கு இருந்த கைதிகள் அவர்களை தடுக்க முயன்றனர். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறை வார்டன் கலாம் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது சகாதேவன் மீது பார்த்தா என்ற சிரஞ்சீவி டம்ளரில் இருந்த டீயை ஊற்றி உள்ளார். இந்த சம்பவத்தால் சிறைச்சாலையில் பரபரப்பு நிலவியது. 

அதன் பிறகு சிறை வார்டன் கள் பார்த்தா உள்ளிட்ட 3 பேரையும் அங்கு இருந்து அழைத்துச் சென்றனர். காயம் அடைந்த சகாதேவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவை மத்திய சிறைச்சாலை வார்டன் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் பார்த்தா என்ற சிரஞ்சீவி மற்றும் கண்ணன், ரியாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: