ஆன்லைனில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூபாய் 1.5 கோடி மோசடி - கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை !!!
ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி மூதாட்டி இடம் 1.6 கோடி ரூபாய் மோசடி செய்தது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை அடுத்த வடவள்ளி அருகே ஒரு கிராமத்தில் 63 வயது மூதாட்டி வசித்து வருகிறார். அவருடைய கணவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த மூதாட்டி instagram பார்த்துக் கொண்டே இருந்தாலும், அப்பொழுது ஆன்லைனில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் பெறலாம் என்று அறிவிப்பு வந்தது. உடனே அவர் அதில் இருந்து செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.
அப்பொழுது மறுமுனையில் பேசிய நபர், தங்களது நிறுவனத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் கொடுப்பதாக கூறினார். இதை அடுத்து அந்த நம்பர் கூறிய செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் முதலீடு செய்தார். ஒவ்வொரு முறை முதலீடு செய்யும் போது அந்த தொகையுடன் லாபத் தொகையும் சேர்ந்து அந்த செயலில் உள்ள அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக காட்டியது. மேலும் அந்த தொகையை எந்த நேரத்திலும் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினர். எனவே அந்த மூதாட்டி தொடர்ந்து முதலீடு செய்து வந்தார்.
சில நேரத்தில் அவர் செயலியில் காட்டிய பணத்தில் குறிப்பிட்ட தொகையை தனது வங்கி கணக்குக்கு மாற்றினார். உடனே பணம் வங்கிக் கணக்குக்கு சென்றது. இதனால் அந்த மூதாட்டிக்கு சந்தேகம் ஏற்படவில்லை, இதனால் அவர் பல தவணைகளில் ஆன்லைன் மூலம் ரூபாய் ஒரு கோடி 66 லட்சத்தை முதலீடு செய்தார். இந்த நிலையில் அந்த மூதாட்டிக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. உடனே அவர் அந்த செயலியில் காட்டும் பணத்தை வங்கி கணக்கு மாற்றம் முயன்றார். ஆனால் முடியவில்லை, உடனே அவர் தன்னிடம் பேசிய நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அந்த நபர் இப்பொழுது பணத்தை எடுக்க முடியாது. இன்னும் அதிக தொகை செலுத்தினால் தான் பணத்தை எடுக்க அனுமதிப்போம் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதை அடுத்து அவர் அந்த செல்போன் எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது அவர் அறிந்தால், இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரூபாய் ஒரு கோடிக்கு குறைவான மோசடி வழக்கை தான் கோவை போலீசார் விசாரிப்பார்கள். ரூபாய் ஒரு கோடிக்கு மேல் மோசடி நடந்தால் அதை சென்னை போலீசார் தான் விசாரிப்பார்கள் எனவே ரூபாய் 1.6 கோடி மோசடி வழக்கை சென்னைக்கு கோவை போலீசார் மாற்றி உள்ளனர்.

0 கருத்துகள்: