கோவை அருகே தங்கையின் காதலனை கொன்ற சிறுவனுக்கு மூன்று ஆண்டு சிறை !!!
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தங்கையின் காதலனை கொன்ற சிறுவனுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயது கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்ததாக தெரிகிறது. இதை அறிந்த சிறுமியின், அண்ணன் சிறுமியையும், அவரின் காதலனையும் கண்டித்து உள்ளார். ஆனாலும் அந்த நபர் சிறுமி மீதான காதலை விடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுமியின் காதலனுக்கும், அண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதமானது.
இந்நிலையில் அந்த சிறுமியின் காதலனுக்கும், அவரின் அண்ணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிறுமியின் அண்ணன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சிறுமியின் காதலனாக கூலித்தொழிலாளியை குத்தி கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் அண்ணனை கைது செய்து இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கை கோவையில் உள்ள இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடந்தது. இதற்கு இடையே வெளியில் வந்த அந்த சிறுவன் மாயமானார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த கொலை வழக்கில் இளைஞர்கள் குழுமத் தலைவர் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

0 கருத்துகள்: